அம்பலாந்தோட்டை நகரில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அம்பலாந்தோட்டை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு இன்று (08) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தஞ்சக் கோரிக்கையாளர்கள் சிலரை, ரிதிகம அரச சீர்திருத்த இல்லத்தில் தங்க வைப்பதற்கு தென் மாகாண ஆளுநர் நடவடிக்க எடுத்து வருவதாக தெரிவித்து, ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக, அம்பலாந்தோட்டை வர்த்தக சங்கத்தின் போசகர் அசேல குமாரசிங்க தெரிவித்தார்.