ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன் விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விமானத்தில் மொத்தம் 148 பேர் பயணித்ததாகத் தெரியவந்திருக்கிறது.
விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டுசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிக்ஞை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.