இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

77

 

எந்தஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் சாதித்த நடிகர்கள் பலர் உள்ளார்கள், அவர்களின் லிஸ்டில் இணைந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் அடுத்தடுத்து நடன கலைஞர், தொகுப்பாளர், விருது விழா தொகுத்து வழங்குவது என படிப்படியாக உயர்ந்து வந்தார்.

சினிமாவில் காமெடியனாக 2வது நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் தன்னை நிரூபித்து நாயகனாக வலம் வந்தார். கடந்த 13 ஆண்டுகளில் 22 படங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

2012ம் ஆண்டு மெரினா படத்திற்காக ரூ. 10,000 சம்பளம் வாங்கியவர் இன்று கோடிகளில் சம்பளம் பெறுகிறார். ரூ. 50 முதல் ரூ. 60 கோடி வரையில் சம்பளம் பெற்று வருகிறார்.

சொத்து மதிப்பு
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என கலக்கும் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு ரூ. 150 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

சென்னை, சொந்த ஊர் என சொந்த வீடுகள், ஆடி, பிம்டபிள்யூ, மினி கூப்பர் போன்ற சொகுசு கார்களும் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமாக உள்ளதாம்.

SHARE