இன்று நள்ளிரவு பூமிக்கு மிக அருகில் நான்கு விண்கற்கள் கடந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய குடும்பத்தில் 6,00,000 ற்கும் அதிகமான விண்கற்கள் காணப்படுகின்றன. இதில் 10,000 விண்கற்கள் பூமியைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் இவற்றால் சில சமயம் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படலாம் எனவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகமான ESA தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கூட நாசா விஞ்ஞானிகள் விண்கற்கள் பூமியை நோக்கி வருவதாகவும், இது பூமியின் சுற்று வட்டப் பாதையில் நுழைந்து தாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று அச்சத்தை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் தற்போது விண்கற்களில் வேகம் எதிர்பார்த்த அளவு இல்லை எனவும் அவை பூமியில் மோதினால் மிகப்பெரிய சேதம் ஏதும் ஏற்படாது எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்கல் பூமியில் இருந்து 1.5 மில்லியன் மைல் தொலைவில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விண்கற்களில் ஒன்று 260 மீட்டர் விட்டம் உடையது என தெரியவந்துள்ளது.