இன்று முதல் மின்வெட்டு! – விசேட அறிவிப்பு வெளியானது…

315

 

நாட்டின் சில பகுதிகளில் இன்று (12) முதல் மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (12) மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சின் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்தார்.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையமொன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மின் நிலையத்தின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை மறு அறிவித்தல் வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

SHARE