இன்றைய நாட்களில் உறவுகள் நீடிக்காததற்கான 6 காரணங்கள்..

109
இன்றைய நாட்களில் உறவுகள் நீடிக்காததற்கான 6 காரணங்கள்…
1. தொழில்நுட்பம் ஏமாற்றுவதை எளிதாக்கியுள்ளது:
இந்த நாட்களில் உறவுகள் நீடிக்கத் தவறியதற்கு ஒரு முக்கிய காரணம், தொழில்நுட்பம் ஏமாற்றுவதை எளிதாக்கியுள்ளது.
சமூக ஊடக பக்கங்களை ஸ்வைப் செய்வதன் மூலம், உங்கள் நகரத்தைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான புதிய நபர்களுடன் நீங்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.
2. சமரசம் செய்ய விரும்பவில்லை:
சமீப நாட்களில் எல்லோரும் தனித்துவத்துடன் இருக்க விரும்புகிறார்கள். யாரும் சமரசம் செய்ய விரும்பவில்லை.
நவீன கால ஆணும் பெண்ணும் சமரசத்திற்குப் பதிலாக விட்டு விலகுவதன் மூலம் எளிதான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். சமரசம் செய்துகொள்வதை பலவீனமாக பார்க்கிறார்கள். விட்டுக் கொடுப்பதற்கும், சமரசம் செய்து கொள்வதற்கும்.வித்தியாசம் தெரியாத இந்த அணுகுமுறை பல உறவுகளை தோல்வியடையச் செய்கிறது.
3. மிகவும் பிஸியாக இருக்கிறோம்:
இன்றைய நாட்களில் ஆணும் பெண்ணும் வசதியாக வாழ்வதற்கு தேவையான விஷயங்களை மட்டுமே விரும்புகிறார்கள். அதை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் நேரத்தையும், சக்தியையும் அதற்காகவே செலவழிக்கிறார்கள். அந்த தேடலில் அன்பை மறந்துவிடுகிறார்கள்.
இந்த நாட்களில் ஒரு உறவில் இருக்கும்போது வரும் நல்லது, கெட்டது அனைத்தையும் சமாளிக்கும் பொறுமை மக்களுக்கு இல்லை. அவர்கள் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள், அவர்கள் காதலுக்கான நேரத்தை மறந்துவிடுகிறார்கள்.
4. நாம் சரியானவர்களாக இல்லாவிட்டாலும், சரியான துணையை விரும்புகிறோம்:
இப்போதெல்லாம் ஆணும் பெண்ணும் குறைபாடுகள் இல்லாத துணையை விரும்புகிறார்கள். நாம் எப்போதும் நல்லவர், சரியாகவே இருக்கிறோம் என்று நினைத்து, சிறிய தவறுகளை கூட ஒப்புக்கொள்ளாமல் உறவை விட்டு விலகுவதற்கு எப்போதும் அவசரப்படுகிறோம்.
யாரும் தங்கள் துணையுடன் பொறுமையாக இருப்பதில்லை. தங்கள் துணையின் சிறந்ததை வெளிக்கொணரும் அளவுக்கு யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. நாம் சரியானவர்களாக இல்லாவிட்டாலும், நாம் அனைவரும் சரியான துணையையே விரும்புகிறோம்.
5. செக்*ஸ் மிகவும் எளிதாகி விட்டது:
இன்றைய நாட்களில், செக்*ஸ் கண்டுபிடிக்க மிகவும் எளிதானது அதோடு இது பெரும்பாலான உறவுகளை சமீப நாட்களில் பாதிக்கிறது. ஒரு புதிய பையன் அல்லது பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கு இப்போதெல்லாம் ஒரு தொலைபேசி அழைப்பு போதும். அந்த நபருடன் உறவில் ஈடுபடாமல் கூட உடலுறவு கொள்வது எளிது.
இந்தத் தலைமுறையினர் இப்போது நல்ல உடலுறவை ஒரு துணை கொடுக்கவேண்டியது அவசியமான தகுதி என்று கருதுகின்றனர், எனவே அவர்கள் தங்களை சிறப்பாக திருப்திப்படுத்தக்கூடிய துணையைத் தேடும் போது முறையற்ற உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.
6. காதலுக்காக யாரும் முட்டாளாக இருக்கத் தயாராக இல்லை:
ஒருவரை வெறித்தனமாக நேசிப்பது என்றால் என்ன என்பதை இந்த தலைமுறை புரிந்து கொள்ளாததால் உறவுகள் இப்போதெல்லாம் நீடிப்பதில்லை. தேவைகளுக்காக பழகுவது அதிகமானதால், வெறித்தனமாக நேசிப்பது காணாமல் போனது.
தங்களை விட்டுக்கொடுத்து யாரும் பாதிக்கப்படத் தயாராக இல்லை. நாம் நமக்காக மிகவும் புத்திசாலியாகிவிட்டோம், நாம் இனி காதலுக்காக முட்டாளாக இருக்க விரும்பவில்லை, என்று தெளிவாக இருக்கிறார்கள்.
SHARE