இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி!

240

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களை பகிர்ந்து மகிழும் வசதியினை தரும் இன்ஸ்டாகிராம் ஆனது பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

தற்போது நேரடி ஒளிபரப்புக்களை செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

முதன் முறையாக இவ் வசதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களும் இவ் வசதியினை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இவ்வாறு ஒளிபரப்பப்படும் நேரடி வீடியோக்களை குறித்த நபரினை இன்ஸ்டாகிராம் கணக்கில் பின்தொடர்பவர்கள் அனைவரும் பார்த்து மகிழ முடியும்.

இதேவேளை தனது தாய் நிறுவனமான பேஸ்புக்கில் தரப்படும் வசதிகளிலில் இருந்து சற்று வித்தியாசமாகவே இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வைரலான நேரடி ஒளிபரப்புக்கள், பிரபல்யமான நேரடி ஒளிபரப்புக்கள் என பல்வேறு வகைகளில் நேரடி ஒளிபரப்புக்களை தெரிவு செய்து பார்த்து மகிழ முடியும்.

SHARE