இன்ஸ்டாகிராம் ரீல்ஸை இனி நேரடியாக டவுன்லோடு செய்யலாம்..!மெட்டா வெளியிட்ட அசத்தல் அப்டேட்

167

 

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்படும் ரீல்ஸ்களை டவுன்லோடு செய்யும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்
வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா, தன்னுடைய வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும், புதிய ரசிகர்களை கவரும் வகையிலும் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பொது(Public) கணக்குகளில் பதிவேற்றப்படும் ரீல்ஸ்களை டவுன்லோடு செய்யும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் டவுன்லோட் செய்யப்படும் வீடியோக்களில் அதை பதிவிட்டவர் ID, Watermark முறையில் அதில் குறியிடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் Public வைத்து இருப்பவர்கள் Watermark அம்சத்தை வேண்டுமென்றால் off செய்து வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE