இன்றைய கால கட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருக்கும் குறுஞ்செய்தி சேவை எது என்று பார்த்தால் அது நிச்சியம் வாட்ஸ் அப் தான்.
புகைப்படங்கள், வீடியோக்கள், குறுஞ்செய்திகள், ஸ்மைலிக்கள் உட்பட ஏனைய கோப்புக்களையும் இச் சேவையினூடாக பகிரப்படக்கூடியதாக இருத்தல் இதற்கு காரணமாகும்.
எனினும் இச் சேவையினை இதுவரை காலமும் மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந் நிலையில் தற்போது அப்பிளின் Mac, மற்றும் ஏனைய இயங்குதளங்களைக் கொண்ட டெக்ஸ்டாப் கணணிகளில் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ் அப் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி விண்டோஸ் 8 மற்றும் OS X 10.9 ஆகியவற்றிற்கு பின்னரான இயங்குதளங்களில் இம் மென்பொருளைப் பயன்படுத்த முடியும்.
மேலும் இதனை ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷனுடன் இலகுவாக ஒருங்கிணைக்க (Synchronized) செய்துகொள்ள முடியும்.
இதற்காக கணணினியில் வாட்ஸ் அப் மென்பொருளை நிறுவி அதனை ஆரம்பித்த பின்னர் தென்படும் QR குறியீட்டினை கைப்பேசியின் ஊடாக ஸ்கான் செய்தால் போதுமானது.