இயக்குனர் செல்வராகவன் மீது காதல் ஏற்பட்டது எப்படி?- ஓபனாக கூறிய கீதாஞ்சலி

132

 

தமிழ் சினிமாவில் சிறந்த படங்கள் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன்.

இவரது திரைப்பயணத்தில் பல முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர்களை தூக்கிவிட்ட பெருமை இவருக்கு உண்டு.

காதல் கோட்டை படத்தில் நடித்த நடிகை சோனியா அகர்வாலை காதலித்து 2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு சில காரணங்களால் விவாகரத்து பெற்றனர். பின் 2011ம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

கணவர் குறித்து பிரபலம்
அண்மையில் ஒரு பேட்டியில் கீதாஞ்சலி, செல்வராகவனுடன் ஏற்பட்ட காதல் குறித்து பேசியுள்ளார்.

இரண்டாம் உலகம் படத்தின் கதையை படித்து செல்வராகவன் மீது காதல் வந்தது அந்த காதல் நாட்கள் செல்ல செல்ல இன்னும் ஆழமாகிக் கொண்டே தான் செல்கிறது.

முதல் பிரசவத்திற்கு பிறகு தாய் பால் சரியாக வராததால் மன அழுத்தத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன்.

அந்த நேரத்தில் கோவத்துல தட்டு, டம்ளர் பறக்கும். அதை புரிந்து கொண்ட செல்வா என்னை நன்றாக பார்த்திக்கொண்டார் என பேசியுள்ளார்.

SHARE