இயக்குனர் ராதா மோகனின் சிறந்த திரைப்படங்கள்.. ஓர் சிறப்பு பார்வை

86

 

தமிழ் சினிமாவில் அடிதடி, வெட்டுக்குத்து, ஹாரர் போன்ற படங்கள் மட்டுமே வெற்றிபெறும் என்ற எண்ணத்தை தகர்த்தெறிந்த நபர்களில் ஒருவர் இயக்குனர் ராதா மோகன். மென்மையான படங்கள் மூலம் மனதை தொடும் கதையை கூறி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.

உறவுகளுக்கு இடையே இருக்கும் உணர்வுகளை பற்றி இவருடைய படங்கள் பேசும் விதம் அழகாக இருக்கும். அப்படி இயக்குனர் ராதா மோகன் இயக்கி வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

சிறந்த திரைப்படங்கள்
1. அழகிய தீயே

இயக்குனர் ராதா மோகனின் அறிமுக திரைப்படம் தான் அழகிய தீயே. 2004ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில், துணை இயக்குனர்களின் வாழ்க்கையை பற்றி இப்படத்தில் அழகாக எடுத்து காட்டியிருப்பார். இப்படத்தில் பிரசன்னா, பிரகாஷ் ராஜ், நாவ்யா நாயர், இளங்கோ சக்திவேல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

2. அபியும் நானும்

தந்தை மகள் உறவு குறித்து படங்களில் சில காட்சிகள் வரும். ஆனால் முழு படமே தந்தை மகள் உறவு குறித்தும், மகள் மீது தந்தை எந்த அளவிற்கு பாசத்தை வைத்துள்ளார் என்பதை பற்றியும் காட்டிய படம் தான் அபியும் நானும். 2008ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் திரிஷா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா, தலைவாசல் விஜய், இளங்கோ சக்திவேல் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இசையமைப்பாளர் வித்யாசாகர்.

3. மொழி

2007ஆம் ஆண்டு ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ் ராஜ், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்டோர் இணைந்து நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ஜோதிகாவின் திரை வாழ்க்கையில் டாப் 5 திரைப்படங்கள் என்று எடுத்தால், அதில் கண்டிப்பாக மொழியும் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

4. பயணம்

முதல் முறையாக ராதா மோகன் இயக்கிய ஆக்ஷன் திரைப்படம் தான் பயணம். நாகர்ஜுனா, பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

5. காற்றின் மொழி

இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்த Tumhari Sulu படத்தின் தமிழ் ரீமேக் தான் காற்றின் மொழி. ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, இளங்கோ குமரவேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

6. உப்பு கருவாடு

ராதா மோகன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் கருணாகரன் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் நந்திதா, ரச்சிதா மகாலக்ஷ்மி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

 

SHARE