இயக்குனர் ஷங்கருடன் ஒரே ஒரு திரைப்படம் தான்.. டாப் ஹீரோவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி

106

 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இதில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடித்து கொண்டிருக்கும் படம் தான் கேம் சேஞ்சர். பாலிவுட் திரையுலகில் கலக்கிக்கொண்டிருக்கும் கியாரா அத்வானிக்கு ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கியாரா அத்வானி கமிட்டாகியுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கே.ஜி.எப் படம் மூலம் இந்தியளவில் டாப் ஹீரோவாக மாறியுள்ளார் யாஷ்.

டாக்ஸிக்
இவர் நடிப்பில் அடுத்ததாக டாக்ஸிக் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. கீதா மோகன்தாஸ் இயக்கும் இப்படத்தில் கரீனா கபூர், நடிகர் யாஷின் சகோதரி கதாபாத்திரத்தில் நடிக்க, ஸ்ருதி ஹாசனை தான் யாஷின் ஜோடியாக நடிக்கிறார் என கூறப்பட்டது.

ஆனால், தற்போது ஸ்ருதி ஹாசன் அந்த கதாபத்திரத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக கியாரா அத்வானி தான் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

SHARE