இயற்கையான உறக்கம் பெற இதை செய்யலாம்…

360
தூக்கம் தானாக வர இதை செய்யலாம்...

தூக்கம் தானாக வர இதை செய்யலாம்…
தூக்கம் என்பது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடுகிறது. மனஅழுத்தம், எதிர்பார்க்காத விஷயம், உறக்கச் சுழற்சி உள்ளிட்டவை மாறுபடும் போது உறக்கமின்மை ஏற்படுகிறது.

இயற்கையான உறக்கம் பெற, சில விஷயங்களை வீட்டிலேயே நாம் முயற்சி செய்யலாம். நீண்ட ஓய்வில்லா நாளின் இறுதியில் சூடான குளியல் மேற்கொள்ளலாம். இது உடலுக்கு நிம்மதி அளிப்பதுடன், உறக்கத்தை வரவழைக்கவும் உதவுகிறது. உறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சூடான குளியலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலையும், மனதையும் அமைதியடையச் செய்ய மசாஜ் சிறந்த சிகிச்சை ஆகும். இரவு நேரத்தில் மசாஜ் செய்வதால், வலி குறைந்து, பதற்றம் மற்றும் மன அழுத்தம் குறைகிறது. மேலும் உறக்கத்தின் தரமும் உயர்கிறது. இதற்காக பயிற்சி பெற்றவர்களை அழைக்க வேண்டும் என்பதில்லை. நீங்களாகவே வீட்டில் மசாஜ் செய்து கொள்ளலாம். உணர்வுகளைத் தூண்டி, சிறந்த உறக்கம் அளிக்க லாவெண்டர் ஆயில் உதவுகிறது.

பாலும், தேனும் சேர்ந்த கலவை, உறக்கம் வரவழைக்க சிறப்பான மருந்து. பாலில் அமினோ அமிலம் டிரிப்டோபான் உள்ளது. இது ஹார்மோன் அளவை அதிகரித்து, இயற்கையான உத்வேகம் அளிக்கிறது. இரவில் உறங்கச் செல்லும் முன், கொஞ்சம் மூலிகை டீ எடுத்துக்கொண்டால் உறக்கம் தானாகவரும். இது உடலை சாந்தமடையச் செய்கிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய தாது மக்னீசியம் ஆகும். இது உடல் தசைகளை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்கிறது. மேலும் ஆரோக்கியமான உறக்கத்தையும் வரவழைக்கிறது. இந்தப் பவுடரை நீரில் கலந்து குளிக்கலாம்.

இரவில் எளிய உணவை உட்கொள்ள வேண்டும். அதுவும் உறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். உறங்கும் முன் லேப்டாப், டிவி, மொபைல் பார்ப்பதை தவிர்க்கவும்.

SHARE