இயற்கையான வழிகளில் தொடைகளின் கருமையை போக்கி பளபளப்பாக்குவது எப்படி?

436

உங்கள் தொடைகளின் கருமையை போக்கி பளபளப்பாக்குவது எப்படி?

உங்கள் தொடைகளின் கருமையை போக்கி பளபளப்பாக்குவது எப்படி?

பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி இரு தொடைகளும் சந்திக்கும் இடம் மிகவும் அடர்ந்த கருப்பாக இருக்கும். இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாண இயற்கையான வழிகளில் எளிதிலும் கிடைக்கும் எலுமிச்சை, தேன், மஞ்சள், கற்றாழை, ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உபயோகித்து உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

நம் சருமங்களில் உள்ள இறந்து போன செல்களை அகற்றுவதில் எலுமிச்சைக்கு முக்கியப் பங்கு உண்டு. எலுமிச்சைச் சாற்றை நேரடியாக சருமத்தில் தேய்க்க வேண்டாம். அதில் அமிலத் தன்மை இருப்பதால், அதைத் தேய்க்கும் போது எரிச்சல் ஏற்படலாம். எனவே, எலுமிச்சைச் சாற்றை நீரில் கலந்து, அந்தக் கரைசலை கருப்பான தொடைப் பகுதிகளில் தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் அந்தப் பகுதியை நீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.

கற்றாழை பசையைக் கடிகாரச் சுற்றிலும் எதிர்-கடிகாரச் சுற்றிலுமாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் தேய்த்து, நன்றாகக் காய விட வேண்டும். காய்ந்து கொண்டிருக்கும் போது தான் அந்தப் பசை தன்னுடைய மேஜிக் வேலையை செய்து கொண்டிருக்கும். பின்னர் மிதமான சுடு நீரில் கழுவி அந்தப் பசையை நீக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் மேஜிக்கிற்கான நல்லதொரு ரிசல்ட் கிடைக்கும்.

நம் சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுப்பதில் தக்காளிக்கு நிகர் தக்காளி தான்! இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் எண்ணெய்களையும் முற்றிலுமாக நீக்க வல்லது. தக்காளியை பேஸ்ட் செய்து கொண்டு, கருப்பான தொடைகளில் 5 நிமிடங்கள் வரை நன்றாகத் தேய்க்கவும். பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். கருப்பான தொடைகள் நிச்சயம் பளபளப்பாக மாறும்.

சிறிது சிறிதாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய் துண்டுகளை கருந்தொடைகள் மீது தினமும் 10 நிமிடங்கள் வரை நன்கு தேய்க்க வேண்டும். வெள்ளரியில் உள்ள ஈரத் தன்மை காரணமாக கருந்தொடைகள் வெளுப்பாகும், சருமமும் பளபளப்பாகும். கொஞ்சம் எலுமிச்சைத் துளிகளையும் சேர்த்துத் தேய்த்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்கிச் சுத்தமாக்குவதில் பப்பாளிக்கு முக்கியப் பங்கு உள்ளது. பப்பாளி பேஸ்ட்டை தினமும் கருமையான தொடைகளில் ஒரு பிரஷ்ஷின் உதவியுடன் மசாஜ் செய்து வந்தால், கருப்பான அழுக்குகள் நீங்கி தொடையோரங்கள் பளபளக்கும்.

தொடைகளில் 5 நிமிடங்களுக்கு தேனை நன்றாகத் தடவி, 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். தேனில் உள்ள ஈரப்பதம் உங்கள் கருந்தொடைகளை குழந்தைகளின் மென்மையான சருமம் போல் மாற்றும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் பளபள ரிசல்ட் கிடைக்கும்.

SHARE