இயற்கை அழகால் சொக்கவைக்கும் மடகாஸ்கர்

830
உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவாக விளங்கும் மடகாஸ்கர் ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒருதீவு நாடு.பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர் பெற்ற இந்த தீவினில் உலகிலுள்ள தாவரம் மற்றும் விலங்கு வகைகளில் 5 சதவீதமானவை உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இத்தீவில் உள்ள விலங்குகளும், மரஞ்செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை என்பதோடு அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதது என்பது குறிப்பிடத்தக்கது.

Antananarivo என்ற தலைநகரை கொண்டுள்ள மடகாஸ்கரின் தாய்மொழி மலகாசி (mal-gazh) என்பதாகும்.

அரிதான உயிரினங்களை கொண்டு இயற்கை எழிலுடன் விளங்கும் இந்த தீவுக்கு ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் சுற்றுலாவாசிகள் படையெடுக்கின்றனர்.

சுற்றுலாத் துறையை பெரிதும் நம்பியுள்ள இந்த அழகிய தீவிற்கு சுற்றுலாவாசிகள் மட்டுமல்லாமல், எத்தனையோ சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர்.

இயற்கையே பிரதானமாக அமைந்துள்ளதால் இந்த தீவில் எண்ணற்ற தாவரவியல் மற்றும் விளங்கியல் பூங்காக்கள் அமைந்துள்ளன.

மடகாஸ்கர் தீவில் உள்ள முக்கிய சுற்றுலாதளங்களில் சிலவற்றினை பற்றி இப்போது பார்ப்போம்…

Ranomafana National Park

மடகாஸ்கரின் தென் கிழக்கு பகுதியில் உள்ள Ranomafana என்ற கிராமத்தில் மலை பகுதியில் இந்த தேசிய பூங்கா அமைந்துள்ளது.

அடர்ந்த காட்டின் நடுவே எண்ணற்ற நீரோடைகளுடன் கண்ணை பறிக்கும் இயற்கை அழகுடன் விளங்கும் இந்த பூங்காவில், அருகிவரும் உயிரினமான golden bamboo lemur என்ற குரங்கு வகை உள்ளது.

இந்த குரங்கு வகை தங்க நிறத்தில் இருப்பதாலும், மூங்கிலையே முக்கிய உணவாக உண்பதாலும் இந்த பெயரினை பெற்றுள்ளது.

Masoala National Park

மடகாஸ்கரின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த Masoala தேசிய பூங்கா சுமார் 250 மைல் தூர மழைக்காடுகளை மூடியுள்ளது.

இங்குள்ள பூங்காக்களில், பத்து வகையான உலகின் மிகப்பெரிய இரவு நேரத்தில் உணவு தேடும் lemur குரங்குகள் உள்ளன.

மேலும் இந்த பூங்காக்களில், எண்ணற்ற பறவை வகைகளும், ஊர்வன வகைகளும் உள்ளன.

snorkeling and kayaking எனப்படும் சாகச விளையாட்டுகளுக்கும் இந்த பூங்காங்கள் பெயர் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Royal Hill of Ambohimanga

மடகாஸ்கர் தீவு மக்களின் புனித தளமாக சுமார் 500 ஆண்டுகாலமாக விளங்கி வரும் இந்த மலை கிராமம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது.

இந்த தீவின் சுற்றுச் சுவர்கள் கடந்த 1847ம் ஆண்டு சுண்ணாம்பு கற்களாலும், முட்டையின் வெள்ளை கருவினாலும் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த தீவின் சிறந்த மன்னர்கள் இந்த கிராமத்தில் தான் தங்கள் ஆயுதங்கள் மற்றும் படையுடன் வாழ்ந்து வந்தனர்.

Ifaty

மடகாஸ்கரின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மீன்பிடி கிராமமான Ifaty-யின் கடற்கரை அழகான ஒன்றாகும்.

இந்த கடலில் சுமார் 60 மைல் நீளத்திற்கு அமைந்துள்ள பவளப்பாறைகள் கடினமான பெரிய அலைகளை தடுக்கும் இயற்கையாக அமைந்த தடையாக உள்ளது.

மேலும், இந்த கடற்கரையில் அமைந்துள்ள பாலைவனம் போன்ற காட்டு பகுதியில், விசித்திரமாக கூர்மையான வடிவிலான baobab மரங்கள் பல நூற்றாண்டுகளாக உள்ளது.

Avenue of the Baobabs

மேற்கூரிய விசித்திரமாக கூர்மையான வடிவிலான baobab மரங்கள், அதிகளவில் வரிசையாக அமைந்திருப்பதை இந்த இடத்தில் காணலாம்.

மடகாஸ்கர் தீவிற்கு வரும் சுற்றுலாவாசிகள் 800 ஆண்டு பழமை வாய்ந்த மரங்கள் அமைந்துள்ள இந்த இடத்தை கண்டிப்பாக தவறாமல் பார்த்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தனி மரங்களாக நிற்கும் இந்த மரங்கள் அனைத்தும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடுகளாகவே இருந்தது என்ரும், விவசாயத்திற்காக நிலங்களை மக்கள் மாற்றியதை தொடர்ந்து இன்று baobab மரங்கள் மட்டுமே தனியாக உயர்ந்து நிற்கின்றன.

Nosy Be

மடகாஸ்கரில் சின்னஞ்சிறு தீவாக அமைந்துள்ள இந்த Nosy Be தீவு, உலகத்தின் பல மூலைகளில் உள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகளின் மனம் கவர்ந்த இடமாக விளங்குகிறது.

Ile Sainte Marie

மடகாஸ்கரில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள Ile Sainte Marie என்ற தீவு பல சாகச விளையாட்டுகளுக்கு சிறந்து விளங்கும் இடமாக விளங்குகிறது.

மேலும், கோடைக்காலத்தில் சிறந்த சுற்றுலா இடமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு எண்ணற்ற இயற்கை எழிலுடன் கண்ணை பறிக்கும் அழகுடன் விளங்கும் மடகாஸ்கரை காணும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

SHARE