உலகின் மிகப்பெரிய 10 பனிப்பாறைகளில் ஒன்று விரைவில் இரண்டாக பிளந்து அன்டார்ட்டிக்காவை விட்டு பிரிய உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Larsen C எனப்படும் இந்த ராட்சத பனிப்பாறை 350 மீற்றர் கனவளவு கொண்டது. இது மேற்கு அண்டார்ட்டிக்காவின் கடற்பகுதியில் மிதக்கிறது.
இந்த பனிப்பாறையில் பல ஆண்டுகளாக வெடிப்பு தோன்றியிருந்தது என்றபோதிலும் இந்த பிளவு கடந்த டிசம்பர் மாதம் அதிகரிக்க தொடங்கியது.
1995ல் Larsen A பனிப்பாறையில் ஏற்பட்ட அதிர்வு, 2002ல் Larsen Bல் ஏற்பட்ட திடீர் பிளவு ஆகியவற்றை தொடர்ந்து, Larsen C பனிப்பாறையை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் 5 ஆயிரம் சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு கொண்ட இந்தப் பனிப்பாறை இன்னும் 20 கிலோ மீற்றர்கள் நீண்டால் இரண்டாகப் பிளந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இது இயற்கையான ஒன்று தான் என்ற போதும், இது இரண்டாக உடைந்து கடலில் கரையும் பட்சத்தில் கடல்நீர் மட்டம் சுமார் 10 செ.மீ உயரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.