இரண்டாம் திருமணம் செய்யப்போகும் நடிகர் சித்தார்த்தின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா

104

 

இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சித்தா. இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

நடிகர் சித்தார்த் பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரி என்பவரை காதலித்து வந்ததை நாம் அறிவோம். ஆனால், இருவரும் தங்களுடைய காதல் குறித்து மனம்திறக்காத நிலையில், சமீபத்தில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என அறிவித்தனர்.

இவர்களுக்கு திருமணம் நடந்துவிட்டது என கூறப்பட்ட பின் தான், திருமணம் இல்லை நிச்சயதார்த்தம் தான் நடந்துள்ளது என புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்தனர். ரசிகர்களும், திரையுலகினரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

சித்தார்த்தின் முன்னாள் மனைவி
இந்த நிலையில், நடிகர் சித்தார்த்த ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் ஆவார். ஆம், மேக்னா நாராயணன் என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் சித்தார்த்.

ஆனால், 2007ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதன்பின், நடிகை சமந்தாவை சித்தார்த் காதலித்து வந்தார் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த காதல் கைகூடவில்லை. மேலும் தற்போது அதிதி ராவ்வை காதலித்து நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.

இந்த நிலையில், சித்தார்த் தனது முன்னாள் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

SHARE