சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் லிகோலாய் சச்தேவ் என்பவருடன் வரலட்சுமிக்கு திருமணம் நடக்கவுள்ளது.
ஆனால், வரலட்சுமிக்கு நிச்சயக்கப்பட்டுள்ள மாப்பிள்ளை லிகோலாய் சச்தேவ்விற்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து ஆகிவிட்டது என்றும், அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது.
இதுகுறித்து இதுவரை வரலக்ஷ்மி எந்த ஒரு கருத்தும் தெரியவில்லை. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்கள் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரண்டாவது மனைவியா?
இதில் “மற்றவர்கள் என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் என்றுமே கவலைப்படமாட்டேன். இப்படி தான் பெண்கள் எப்பவும் மற்றவர்கள் பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுக்காக வாழுங்கள். நீ இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்கிறவர்கள் யாரும் உங்கள் வாழ்க்கை முழுதும் பயணிக்க போவதில்லை. நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு துணையாக நிற்கப்போகிறீர்கள்” என கூறியிருந்தார்.