இரண்டு தலை..ஆனால் ஒரே உடம்பு: இந்த அழகு பெண்களை பற்றி தெரியுமா?

668

மனிதனாக பிறப்பதே அரிதான விடயம் தான். அதிலும், இரண்டு தலை, ஒரே உடம்புடன் பிறந்தால் எப்படி இருக்கும்? அப்படி அதிசய இரட்டை பிறவியாய் பிறந்து ஆச்சரிய வாழ்வை வாழ்பவர்கள் தான் 26 வயதான Abby மற்றும் Brittany Hensel! அமெரிக்காவில் வாழும் இவர்கள் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் இதோ,

Abby மற்றும் Brittany Hensel இருவருக்கு ஒரே உடல் என்றாலும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல், வயிறு போன்றவைகள் தனித்தனியாக உள்ளது. சாதரண மனிதர்களுக்கு எளிதான விடயங்களான நடப்பது, கைதட்டுவது இவர்களுக்கு சவாலான விடயமாக சிறு வயதில் இருந்தது. இவர்கள் தங்கள் டீன் ஏஜ்ஜில் வாழ்ந்த விடயங்களின் தொகுப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகியுள்ளது.

இவர்களால் வேகமாக ஓட, நிச்சல் அடிக்க, சைக்கிள் ஓட்ட முடியும். ஆனால் இவர்கள் அதற்கு சாதாரண ஆட்களை விட சற்று மெனக்கெட வேண்டும். Abby மற்றும் Brittany Hensel ஆகிய இருவரும் கார் ஓட்டுவதில் வல்லவர்கள். Abby வலது பக்க கண்ட்ரோலையும், Brittany இடது பக்க கண்ட்ரோலையும் பார்த்து கொள்வார்கள்.

இவர்கள் புகழ்பெற்ற bethel பல்கலைகழகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு தங்கள் பட்டபடிப்பை முடித்துள்ளார்கள். விருப்பத்தை பொருத்த வரையில் Abby க்கு கணிதமும், Brittanyக்கு எழுதுவதும் பிடிக்கும். இவர்கள் பார்க்க வித்தியாசமாக இருப்பதால் பலர் இவர்களை புகைப்படம் எடுக்க நினைப்பார்கள். இவர்கள் அனுமதியில்லாமல புகைப்படம் எடுப்பவர்களை இவர்களுக்கு பிடிக்காது.

காதல் செய்து பின்னர் திருமணமும் செய்து குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்பது இவர்கள் விருப்பமாகும். இவர்களும் பெண்கள் தானே! இவர்கள் உடலை தனித்தனியாக பிரிக்க பெற்றோர் விரும்பவில்லை. காரணம் ஆப்ரேஷன் செய்தால் அவர்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

SHARE