செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள iPhone 16 சாதனம் இதுவரை வெளிவராத இரண்டு புதிய நிறங்களில் வெளிவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPhone 16 சாதனம்
Apple நிறுவனத்தின் iPhone 16 ஸ்மார்ட்போன் வரிசை வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் வெளிவரும் என்று தகவல் வெளியானது. அதனால், iPhone 16 series பற்றிய தகவல்கள் கசிந்து கொண்டே இருக்கிறது.
இந்த முறை 5 iPhone 16 மாடல்களை அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் பரவி வருகிறது. அதாவது, iPhone 16 SE, iPhone 16 Plus SE, iPhone 16, iPhone 16 Pro, iPhone 16 Pro Max ஆகிய 5 மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், அமசங்களை பொறுத்தவரை அதன் வடிவமைப்பு மற்றும் கேமரா பற்றியும் சில தகவல் பரவி வருகிறது.
iPhone 16 Pro சாதனம் 2 புதிய நிறங்களில் வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த ஆண்டில் மஞ்சள் (Yellow) மற்றும் டைட்டானியம் க்ரேய் (Titanium Grey) நிறங்களில் வரும் என்று கூறப்பட்டுள்ளது.