இரத்தம் ஏன் சிகப்பா இருக்குனு தெரியுமா? அது உடலில் எங்கேதான் உற்பத்தியாகிறது?…

303

blood_001-w245

1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும் போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.

3. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.

4. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது.

5. ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

6. ரத்த அழுத்தம் என்றால் என்ன?.

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

7. உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?

ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.

8. மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

9; ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால் தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

10; யார் ரத்த தானம் செய்யக்கூடாது?.

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.

– See more at: http://www.manithan.com/news/20160918121629#sthash.ECdVsoWA.dpuf

SHARE