இரவில் இந்த மந்திரங்களை சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா?

162

தூக்கமின்மை பிரச்சனை என்பது அனைவரையும் வாட்டி வதைக்கும் ஒன்று. அதிக வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை இவை இரண்டுமே தூக்கமின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணிகளாக முன்வைக்கப்படுகின்றன.

தூக்கமின்மை பிரச்சனையில் இருக்கும்போது, சில நேரங்களில் கெட்ட கனவுகள் வேறு வந்து நமது தூக்கத்தை ஆட்கொள்ளும்.

பயந்த சுபாவங்கள் உள்ளவர்களையே இந்த கெட்ட கனவு அதிகமாக ஆட்கொள்ளும்

இப்படி இரவில் வரும் கெட்ட கனவில் இருந்து விடுபட மந்திரம் இதோ,

நரசிம்ம மந்திரம்

தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து “ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா”

என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.

துர்கா தேவி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் துக்க ஹந்த்யை துர்க்காயை தே நம ஸ்வாஹா ||

தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து மேற்சொன்ன மந்திரத்தை 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

பயந்த சுபாவம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியமும் நல்வாழ்வும் பெறுவார்கள்.

SHARE