இராஜாங்க அமைச்சர் விஜயகலா அவர்களின் ஆவேசமான பேச்சு தற்கால கட்டத்தில் முட்டாள்த்தனமானது

284

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள், தேசியத் தலைவர் பிரபாகரன் தொடர்பில் கூறியிருப்பதும் விடுதலைப்புலிகளின் போராட்டம் மீள்கட்டியெழுப்பப்பட வேண்டுமென்பதும் வெறுமனே யாழில் தனது வாக்கு வங்கியினை நிரப்புவதற்கு மட்டுமேயன்றி வேறொன்றுக்குமல்ல. இவரது கணவனை சுட்டதன் பின்னணி யார் என்று தெரிந்தால் இவ்வாறு சப்புக்கொட்டும் வார்த்தைகளைப் விஜயகலா பேசியிருக்கமாட்டார்.
ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதிகளில் ஓடி ஒழித்துக் கொண்ட விஜயகலதனது கணவனின் இறப்பின் பின்னர் ஐ.தே.க. அரசாங்கத்தில் இணைந்து கொண்டு தமிழின அழிப்பு காலகட்டத்தில் அரச ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து செயற்பட்டவர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் விடுதலைப் போராட்டத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர் இவர். மக்களை உசுப்பேற்றி தன்னுடைய வாக்குவங்கிகளை நிரப்பும் அளவிற்கு அறியாமையில் தற்போதைய மக்கள் நிலையில்லை. மேலும் விஜயகலா மகேஸ்வரனின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக நாம் பார்க்கின்ற பொழுது ஊடகங்களில் அதனைப் பிரசுரிப்பது பிழையான விடயமாகும்.
இவர் விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார் என்பதற்குரிய ஒப்பதல் வாக்குமூலம்; பதிவாகியுள்ளது. விஜயகலா மகேஸ்வரனினது கொழும்பில் அமைந்துள்ள இவரது வியாபார நிலையமொன்றில் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்களை காட்டிக் கொடுத்து அரசாங்கத்தின் ஆதரவை அப்பொழுது பெற்றுக்கொண்டார்.

இவர்களுடைய செயற்பாட்டினால் 2010ஆம் ஆண்டு 4ஆம் மாடி, பூஸா போன்ற தடுப்புக் காவல்களில் பல போராளிகள் சித்திரவதைக்கு உட்பட்டதை நாம் நன்கு அறிவோம். இதன் போது இவர்கள் பூஸா முகாமிற்கோ, 4ஆம் மாடிக்கோ குறித்த நபர்களைப் பார்க்கவும் வரவில்லை. இதனுடைய உண்மைகளையும் நாம் அறிவோம். ஆகவே ஒருசில விடயங்களினைப் பிரதியமைச்சர் விஜயகலா அடக்கிவாசிப்பது அவரது அரசியல் பிழைப்புக்குச் சாலச் சிறந்தது.

உண்மையில் விடுதலைப்புலிகளினை வைத்து அரசியல் நடாத்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்னும் முற்படுவாராகவிருந்தால் பல நூறு ஆதாரங்களை இன்னும் நாம் முன்வைக்கவேண்டிய நிலை ஏற்படும்.

SHARE