எனினும், இராணுவத்தினருக்கான எந்தக் கொடுப்பனவுகளும் இதுவரை குறைக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பீ.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
குறித்த கொடுப்பனவுகள் தொடர்பாக முதன்முதலில் ஊடகங்களுக்கு நேற்றைய தினம் எல்லே குணவங்ச தேரரினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அமைச்சரவையின் அங்கீகாரத்துடனே இந்த கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக தேரர் மேலும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
எனினும், குறித்த ஊடக விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சின் செயலாளரிடம் சில ஊடகங்கள் வினவியபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுத்ததோடு சகல இராணுவத்தினருக்கும் உணவு பட்டியல் அட்டை உள்ளது. எனவே, அதன்படியே அவர்களுக்கான உணவு வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்ததோடு,எவ்வித கொடுப்பனவுகளும் குறைக்கப்படவில்லை என்றும் இதற்காக எந்த அமைச்சும் யோசனைகளை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.