“இராணுவ நெருக்கடிக்குள்ளும் நடைபெற்றது இலவச மருத்துவ முகாம்”

823
(TPN NEWS)
இளங்கோபுரம், பாரதிபுரம், மாணிக்கபுரம் ஆகிய விஸ்வமடு பிரதேச மக்களுக்கு 10.08.2014 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
யாழ்ப்பாண மருத்துவ சங்க வைத்திய அதிகாரிகளின் அர்ப்பணிப்புடன் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் (வட மாகாணசபை உறுப்பினர்) அவர்களின் ஒருங்கமைப்பில் இவ் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இம் மருத்துவ முகாமிற்கு வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்கள் விசேடமாக கொழும்பில் இருந்து வந்து கலந்துகொண்டார். இதில் 150 ற்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெற்றனர்.
1
2
5
மேற்படி பிரதேச மக்கள் மருத்துவ சேவையை பெறுவதற்காக பலர் பத்து கிலோ மீற்றர் தூரம் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுமிடத்து இவ்வாறான இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது இப்பிரதேச மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்ததாக பயன் பெற்ற மக்கள் தெரிவித்தனர்.
அதே சமயம் இவர்களுக்குரிய சேவையினை வைத்தியர்கள் வழங்கிக்கொண்டிருக்கும் பொழுது இராணுவத்தினரும் அவர்களது புலனாய்வாளர்களும் தொடர்ந்து சுற்றி வலம் வந்து கொண்டிருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது.
சிவில் நிர்வாகம் உள்ள ஒரு பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகின்ற பொழுது இவ்வாறான இராணுவ நெருக்கடி தேவையற்றது என மக்கள் விசனம் தெரிவித்தனர்
செய்தியாளர் பண்டாரவன்னியன்
SHARE