இரா.சம்பந்தனைப் பாராட்டு நிகழ்வு திருகோணமலையில்

524

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் புதிய பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வும், தமிழரசுக் கட்சியின் எட்டாவது தலைவராக இருந்து அரும்பணிகளாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைப் பாராட்டு நிகழ்வும் திருகோணமலையில் நடைபெறவுள்ளன.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாலை 4 மணிக்கு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் தலைவருமான சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் சேருவில, மூதூர், திருகோணமலை தொகுதிகளின் உறுப்பினர்கள், கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்

SHARE