இருதய கோளாறு, உயர்குருதியமுக்கம், பக்கவாத அறிகுறி என பல மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பித்தபோதும், பசில் ராஜபக்சவை பிணையில் விட முடியாதென கடுவெல நீதிமன்றம் கறாராக அறிவித்துவிட்டது.

362

 

சிறைக்குள்ளேயே இருங்கள் பசிலின் கோரிக்கைக்கு நீதிபதி.

 

இருதய கோளாறு, உயர்குருதியமுக்கம், பக்கவாத அறிகுறி என பல மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பித்தபோதும், பசில் ராஜபக்சவை பிணையில் விட முடியாதென கடுவெல நீதிமன்றம் கறாராக அறிவித்துவிட்டது. பசிலை எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து சிறைவைக்கப்பட்டால் பக்கவாதம் வந்துவிடப் போகிறதென பசில் தரப்பு மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்தபோதும், பிணை மனுவை நீதிபதி நிராகரித்துவிட்டார். பசிலுடன் இணைந்து பெரும்தொகை நிதியை சுருட்டிய மற்ற மூவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று மதவழிபாட்டின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி தற்போது நடப்பதெல்லாம் அரசியல் பழிவாங்கல் என குற்றம் சுமத்தியுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ செய்தது சாதாரண குற்றமென்றும், சாதாரண சட்டங்களின் கீழ் அதனை விசாரிக்க முடியுமென்றபோதும், அரசியல் பழிவாங்கலிற்காக அவர் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் விசாரிக்கப்பட்டு வரவதாக குற்றம் சுமத்தினார்.basil-police

SHARE