மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாமி மலைபகுதியில் உள்ள சின்ன சோலங்கந்தை அம்மன் ஆலயம் மற்றும நூத்தி அம்மன் ஆகிய இரு ஆலயங்களும் உடைக்கப்பட்டு அங்குள்ள பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டள்ளன.
இக் கொள்ளைச்சம்பவம் நேற்று 1ம் திகதி இரவு இனம்தெரியாத நபர்களால் இடம் பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு புகார் கிடைக்கபெற்றதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க மற்றும் விசேட பொலிஸ் பிரிவினர் சென்று விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும்,பொலிஸ் மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டு தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இங்கு அதிகளவு தங்க நகைகள் மற்றும் அதிகளவு பணம் என்பன இவ்விரு ஆலயங்களிலும் கொள்ளையிடப்பட்டு சென்றுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.