இரு சிறுவர்களைத் தெரிகிறதா? அல்லது அறிந்தீர்களா??

570
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடில்டன் தோட்டத்தைச் சேர்ந்த சுப்பையா செல்வராஜ் தர்சன் குமார் (ராஜேஸ்கண்ணா) என்ற சிறுவனை காணவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவர் கடந்த மாதம் 19ம் திகதி இரவு 08 மணியளவில் காணாமல் போனதாக பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் பெரியராணிவத்தை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 07இல் கல்வி கற்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவன் குறித்த தகவல் அறிந்தோர் லிந்துலை பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் 7ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனை காணவில்லை

மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த பாடசாலை மாணவனை காணவில்லை என அம்மாணவனின் தாயார் களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
கேசவன் ஸ்ரீபன் என்ற களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆண்டு 7 இல் கல்வி பயிலும் மாணவனே காணாமல் போயுள்ளதாக தாயார் தெரிவிக்கின்றார்.

தனது அம்மப்பாவின் வீட்டிற்கு ஓந்தாச்சிமடம் சென்று திரும்பி வருகையில் தனது மகன் காணாமல் போயுள்ளதாக தாயார் தெரிவிக்கின்றார். நேற்று காலை 6.30 மணியளவில் ஓந்தாச்சிமடத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் காணாமல் போயுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேசவன் ஸ்ரீபன் என்ற மாணவன் ஜஸ்ரின் எனவும் அழைக்கப்படுவதாகவும் தாயார் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

SHARE