குருணாகலில் இன்று அதிகாலை இரண்டு பொலிஸார் கடத்தப்பட்டு, அதிலொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தகவல் தருவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் தருவதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
தகவல் தர விரும்புவர்கள் 0774784648 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
குருணாகல் பிரதேசத்தில் இன்று அதிகாலை இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமையை அடுத்தே பொலிஸ் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்