தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் மற்றும் மேல், தென் மாகாண சபைகளுக்கான அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேல் மாகாண முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும் தென்மாகாண முதலமைச்சராக சான் விஜயலால் டி சில்வாவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.