இறந்தவருடன் பேச முடியுமா? இதை செய்தால் போதும்..சாத்தியமாக்கும் நவீன தொழில்நுட்பம்

158

 

AI உதவியுடன் Project December என்ற அமைப்பு இறந்தவர்களுடன் பேச முடியும் எனக் காட்டுகிறது.

அன்பானவர்களின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாதவர்களில் பலர், இறந்தவரிடம் பேச முடியும் என்றால் அதில் நம்பிக்கை கொள்கின்றனர். அது அவர்களுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இதனை AI தொழில்நுட்பம் கிட்டத்தட்ட சாத்தியமாக்குகிறது. Project December Of AI Chatbot என்ற அமைப்பு இதனை செய்து காட்டுகிறது.

சிரியாவைச் சேர்ந்த Sirine Malas என்ற நடிகை தனது தாயை இழந்தார். 2015ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்ற Sirine, ஒரு குழந்தை பிறந்த பின்னர் தாயை காண விரும்பியுள்ளார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிறுநீரக செயலிழப்பால் அவரது தாய் இறந்துவிட்டார். இந்த நிலையில் தான் Project december குறித்து அறிந்துள்ளார் Sirine.

தனது விவரங்களையும், தாயின் விவரங்களையும் ஒன்லைன் படிவத்தில் அவர் நிரப்பினார். அதன் பின்னர் Sirine-யின் தாயுடன் உரையாட விரும்பிய அனைத்து வார்த்தைகள் OpenAIயின் GPT2 பதிப்பால் இயக்கப்படும் AI Chatbotக்கு சென்றது.

அந்த AI கருவி Sirine-யின் தாயின் சுயவிவரத்தை உள்ளீடுகளின் அடிப்படையில் உருவாக்கியது. பயனர்கள் சுமார் ஒரு மணிநேரம் Chatbot-க்கு செய்தி அனுப்பலாம்.

இதில் Sirine தனது தாயுடன் உரையாடும் வாய்ப்புகள் செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டன.

அதில் உரையாடிய Sirine, தனது தாயுடன் பேசுவதைப் போலவே உணர்ந்ததாக தெரிவித்தார். ஆனால், சில தருணங்கள் வேறு யாரோ பதில் அளித்தது போல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சில சமயங்களில் Chatbot-யில் உரையாடும்போதும் மிகவும் பயமாக இருந்ததாகவும் கூறிய Sirine, தாய் கூப்பிடும் செல்லப் பெயரிலேயே அந்த உரையாடல்களில் அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, இந்த தொழில்நுட்பத்தில் ”நன்றாக சாப்பிடுகிறாயா? நான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றும் கேட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

வெறும் 10 டொலர்கள் செலவில் இறந்தவருடன் இந்த உரையாடலில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேள்விகளுக்கான பதில்களை உருவாக்க இணையம் முழுவதிலும் இருந்து பரந்த அளவிலான புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் உரைகளில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

SHARE