இறந்து ஒருநாள் கழித்து உயிர்பிழைத்த குழந்தை: அதிர்ச்சியளிக்கும் நம்பமுடியாத உண்மை…..

499

பிலிப்பைன்ஸ் நாட்டில் இறந்துபோன குழந்தை ஒன்று ஒருநாள் கழித்து சவப்பெட்டியில் வைக்கும் நேரத்தில் திடீரென கண்விழித்ததால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Aurora, Zamboanga del Sur என்ற பகுதியில் மூன்று வயது குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மறுநாள் மதியம் ஒரு மணியளவில் இறுதிச்சடங்கிற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

கடைசியில் குழந்தையின் தந்தை இறந்த குழந்தையை தூக்கி சவப்பெட்டியில் வைக்கும் போது திடீரென கண் விழித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை குழந்தையை சோதித்து பார்த்தபோது குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்திருப்பது தெரிந்தது.

உடனடியாக குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்து ஒருநாள் கழித்து மீண்டும் குழந்தைக்கு உயிர் வந்ததை பார்த்து மருத்துவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் வாழ்நாளில் இப்படியொரு நிகழ்ச்சியை தாங்கள் கண்டதில்லை என்று அதிசயத்துடன் கூறியுள்ளனர்.

 

SHARE