இறப்பிற்கு பின் நடப்பது என்ன? நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம்

350

 

இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்ற கேள்விக்கான பதில் பல நூற்றாண்டுகளாக கிடைக்காத போதிலும், அது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் இறப்புக்கு பின் என்ன நடக்கும் என்பது தொடர்பான ஆராய்ச்சியை ஒரு குழுவினர் செய்துள்ளனர்.

இது தொடர்பான ஆராய்ச்சியில் இதய நோயால் பாதிக்கப்பட்டு 15 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் 2,000 பேரை பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் நோயாளிக்கு இதயம் துடிப்பது நின்ற பிறகு, மருத்துவர்கள் மீண்டும் இதயம் துடிக்க வைக்க போராடிய கனத்தில் நாங்கள் எங்கள் உடலை விட்டு வெளியேறியதை உணர்ந்தோம் என்று 40% பேர் தெரிவித்துள்ளனர்.

அதாவது தங்கள் இதயம் மீண்டும் துடிக்க தொடங்குவதற்கு முன் தங்களை சுற்றி நடப்பதை உணரமுடிந்ததாகவும், உடலை விட்டு வெளியேறி அந்த அறையின் மூலையில் நின்று தன் உடலை தானே பார்த்ததாகவும் நோயாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

57 வயது நோயாளி ஒருவர் தனது இதயம் துடிப்பது நின்ற பிறகு சுமார் 3 நிமிடம் தன்னை சுற்றி இருந்த செவிலியர்கள் பேசிய பேச்சு, செயல் மற்றும் அந்த அறையில் எழுந்த ஓசைகள் என அனைத்தையும் உள்ளபடியே விவரித்தது மருத்துவர்களை புருவம் உயர்த்த செய்துள்ளது.

ஏனெனில், இதயம் துடிப்பது நின்ற அடுத்த கனமே மூளையின் செயலும் முற்றிலுமாக நின்றுவிடும். அந்த நேரத்தில் நடந்தவற்றை அந்த நபர் நடந்தபடியே கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 2060 இதய நோயாளிகடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் cardiac arrest எனப்படும் நெஞ்சு வலியில் இருந்து மீண்டு உயிர் பிழைத்த 330 பேர்களில், 140 பேரிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 39 சதவிகித நபர்கள் தங்கள் இதயத் துடிப்பு நின்ற பிறகும் தங்களை சுற்றி நடந்தவற்றை உணர முடிந்ததாகவே தெரிவித்துள்ளனர். அவர்களில் பலர் நடந்தவற்றை உள்ளபடியே முழுமையாக விளக்க முடியாவிட்டாலும், தாங்கள் விழிப்புணர்வுடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

சிலர் தாங்கள் பிரகாசமான ஒளியை பார்த்தாகவும், சூரிய ஒளி போன்ற வெளிச்சத்தை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் பயம் தொடர்பான உணர்வுகளை பெற்றதாக குறிப்பிட்டுள்ளனர். ஆழமான நீர் நிலைகளில் மூழ்குவதும் போல் உணர்ந்துள்ளனர்.

மருத்துவர்கள் கூறுகையில், இவர்களில் பெரும்பான்மையானவர்களும் மரணத்தின் நெருக்கத்தில் பலவிதமான உணர்வுகளை பெற்றிருப்பார்கள். ஆனால் சிகிச்சையின் போது அவர்களுக்கு வழங்கப்பட்ட மருந்தின் விளைவாக தாங்கள் உணர்ந்தவற்றை அவர்களால் ஞாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

இறப்பிற்கு பின் என்ன தான் நடக்கும் என்பது இன்றுமே கேள்விக்குறியாக இருந்தாலும், இந்த ஆராய்ச்சியின் மூலம், இறப்பின் அருகே சென்று திரும்பும் நபர்கள் ஏதோ ஒரு அனுபவத்தை பெறுகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

– See more at: http://www.manithan.com/news/20151123117748#sthash.WwgIB7NY.dpuf

SHARE