இறுதி வரை போராடி தோற்றது இலங்கை!

115

 

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

தம்புள்ளை – ரங்கிரிய மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Rahmanullah Gurbaz அதிகபட்சமாக 70 ஓட்டங்களையும், Hazratullah Zazai 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Matheesha Pathirana மற்றும் Akila Dananjaya ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் Kamindu Mendis ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 65 ஓட்டங்களை பெற்றதுடன் Pathum Nissanka உபாதை காரணமாக வௌியேறிய நிலையில் 60 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் Mohammad Nabi 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

எவ்வாறெனினும் 3 போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE