இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இந்திய பிரதிநிதி இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போர் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்திய பிரதிநிதி அறிவித்துள்ளார்.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் உள்ளக ரீதியான விசாரணைகளே நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.
கடந்த அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய ஆணையாளர் செயட் அல் ஹூசெய்ன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதிநிதி கோரியுள்ளதாக சிங்களப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.