இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஊடகச் செயலர் பாஸ்கரா, மற்றம் பல தலைவர்களும் பங்குகொண்டுள்ளனர். கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தீர்மானங்கள் வெளியிடப்பட்டு உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
THINAPPUYAL NEWS படங்களும் தகவல்களும்:- இ.தர்சன்