இலங்கையர்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய தகவல்…

297

 

இலங்கை மக்கள் சுகாதார பழக்கங்களை பின்பற்றாமல் செயற்பாட்டால் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கும் ஆபத்துக்கள் உள்ளதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று மீண்டும் பல நாடுகளில் தலை தூக்க ஆரம்பித்துள்ளதாக இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான நிலைமை ஏற்படாமல் இருப்பதனை அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக சுகாதார சட்டங்களை பின்பற்றி செயற்படுமாறு இராணுவ தளபதி நாட்டு மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவரையில் நாட்டில் கொவிட் தொற்று ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE