இலங்கையின் கடந்த பாராளுமன்றத் தேர்தல்களும், 2020 பாராளுமன்றத் தேர்தலும்

573

இலங்கையைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தல், பாராளு மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சி சபைகளுக்கானத் தேர்தல் என மாறி மாறி நடைபெற்று வருகின்றது. எனினும் 2020 பாராளுமன்றத் தேர்தலானது இதுவரை காலமும் இல்லாத அல்லது நடைபெறாத சுகாதார ரீதியானதொரு சவாலுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக் குழுவுக்கும் நாட்டுக்கும் இவ்விடயம் புதிது. அதாவது கொரோனா என்கிற கிருமியின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவி ரமாக இடம்பெற்று வருகின்றன. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பரப்புரைக் கூட்டங்களை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியிருந்தாலும் அந்த கட்டளையை கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஏற்று செயற்படுவதை காண முடியவில்லை.

கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டது என முன்னதாக அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்தாலும், இரண் டாவது அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கைகள் விடுக்கப் பட்டுள்ளதால், சுகாதார நடை முறைகளுக்கு முன்னுரிமை, முக்கியத்துவம் வழங்கியே தேர் தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 196 ஆசனங்களைக் கைப்பற்று வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 682 பேரும், சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 7 ஆயிரத்து 452 பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் வாக்களிப் பதற்கு ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் எத்தனைபேர் வாக்களிப்பார்கள் என்பதை சரியாக கணித்துக் கூற முடியாது. அதேபோல் அளிக்கப்படும் வாக்குகளில் எத்தனை வாக்குகள் நிராகரிக்கப்படும் என்பதையும் ஊகிக்க முடியாது.கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.

இதன்படி 19 ஆசனங்களை இலக்குவைத்து அங்கீகரிக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளில் இருந்து 352 பேரும், 26 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 572 பேரும் தேர்தலில் இறங்கியுள்ளனர்.பொலன்னறுவை மாவட்டத் திலேயே குறைந்தளவான வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். அரசியல் கட்சிகளி லிருந்து 88 பேரும், சுயேட்சைக் குழுக்களில் இருந்து 64 பேருமாக மொத்தம் 152 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கம்பஹா மாவட்டத்திலேயே கூடுதல் வாக்காளர்கள் இருக்கின்றனர். 17 லட்சத்து 85 ஆயிரத்து 964 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அரசியல் கட்சிகளின் சார்பில் 358 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 45 நிராகரிக்கப்பட்டு 313 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 697 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 80 நிராகரிக்கப்பட்டு 617 ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பாராளுமன்றத்துக்கு 29 பேர் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுகின்றனர். 113 ஆசனங்களைப் பெறும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுக்கு ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை கிட்டும்.

electoral_reg_2019_E 

இலங்கையர்களுக்கு 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. இதன்படி இலங்கையின் முதலாவது அரசுப் பேரவைக்கான பொதுத்தேர்தல் 1931 ஜூன் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெற்றுள்ளது. 1947ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, அவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கான நிறத்தின் அடிப்படையிலேயே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. 1947ஆம் ஆண்டுதான் அரசி யல் கட்சிகளுக்கும், சுயேட்சைக் குழுக்களுக்கும் தேர்தல் சின்னங்கள் வழங்கப்பட்டு, தொகுதிவாரி முறையில் வாக்க ளிப்பு இடம்பெற்றது. எனினும், 1978இல் தொகுதிவாரி முறை மாறியது. விகிதாசார விருப்புவாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவிலும் அந்த முறையி லேயே தேர்தல் நடைபெற்று வருகின்றது.

1989 முதல் 2015 வரை பொதுத் தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள்

1. தேர்தல் திகதி – 1989 பெப்ரவரி 15. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 59 லட்சத்து 62 ஆயிரத்து 31 (63.60%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3 லட்சத்து 65 ஆயிரத்து 563 ( 6.13%)
செல்லுபடியான வாக்குகள் – 55 லட்சத்து 96 ஆயிரத்து 468 ( 93.87%)

2.1994 ஒக்டோபர் 16. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 83 லட்சத்து 44 ஆயிரத்து 95 (76.24%)நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4 லட்சத்து 389 (4.80%)செல்லுபடியான வாக்குகள் 79 லட்சத்து 43 ஆயிரத்து 706 (95.20%)

3.2000 ஒக்டோபர் 10. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 91 லட்சத்து 28 ஆயிரத்து 823 (75.62%) நிரா கரிக்கப்பட்ட வாக்குகள் – 481,155 (5.27%) செல்லுபடியான வாக்குகள் 86 லட்சத்து 47 ஆயிரத்து 668 (94.72%)

5.2001 டிசம்பர் 05. அளிக்கப்பட்ட வாக்குகள் – 94 லட்சத்து 49 ஆயிரத்து 813 (76.03%) நிராகரிக்கப்பட்ட வாக்கு கள் – 4 லட்சத்து 93 ஆயிரத்து 944 (5.22%) செல்லுபடியான வாக்குகள் – 89லட்சத்து 55 ஆயிரத்து 869 (94.77%)

5. 2004 ஏப்ரல் 02. அளிக்கப்பட்ட வாக்குகள் – 97 லட்சத்து 97 ஆயிரத்து 680. நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5 லட்சத்து 34 ஆயிரத்து 948. செல்லு படியான வாக்குகள் – 92 லட்சத்து 62 ஆயிரத்து 732.

6.2010 ஏப்ரல் 08. அளிக்கப்பட்ட வாக்குகள் 86 லட்சத்து 30 ஆயிரத்து 689 (61.26%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5 லட்சத்து 96 ஆயிரத்து 972 (6.92%) செல்லுபடியான வாக்குகள் – 80 லட்சத்து 33 ஆயிரத்து 717 (93.08%)

7.2015 ஒக்டோபர் 17. அளிக்கப்பட்ட வாக்குகள் ஒரு கோடியே 16 லட்சத்து 84 ஆயிரத்து 98 (77.66%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5 லட்சத்து 17 ஆயிரத்து 123 (4.43%) செல்லுபடியான வாக்குகள் – ஒரு கோடியே 11 லட்சத்து 66 ஆயிரத்து 975 (95.57%)

வாக்கு எண்ணப்படும் முறை

தேர்தல் முடிந்தவுடன் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக வாக்குகளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கான போனஸ் இடம் அளிக்கப்படும்.

பின்னர் பதிவான வாக்குகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்ஃசுயேச்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படும். அவர்கள் சார்பில் யாரும் நாடாளுமன்றம் செல்ல முடியாது.

இதையடுத்து ஐந்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் / சுயேச்சைக் குழுக்களின் கூட்டு வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து கழிக்கப்படும். மீதமிருக்கும் வாக்குகளே உறுப்பினர்களைத் தேர்தெடுக்க செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்படும். இலங்கைத் தேர்தல்களில் வாக்குப் பதிவு முடிந்தவுடனே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

இந்தக் கணக்கீட்டுக்கு பிறகு அந்த மாவட்டத்துக்குண்டான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டு, அந்த எண்ணிக்கையால் செல்லுபடியான வாக்குகள் வகுக்கப்படும்.

இதில் கிடைக்கும் எண்ணிக்கையே ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்ய தேவையான வாக்காகக் கருதப்படும்.

அந்த எண்ணிக்கையின் அடிப்படையில், கட்சிகள் பெற்ற வாக்குகளை வைத்து அவர்களுக்கு எவ்வளவு இடங்கள் என்பது முடிவாகிறது.

1947 முதல் 2015 வரை இலங்கை யில் நடைபெற்றுள்ள 15 பாராளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி 08 தேர்தல்களிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலை மையிலான கூட்டணி 07 தேர்தல்களிலும் வெற்றி பெற்று அரியணையேறியுள்ளன. பிரதான இரு அரசியல் கட்சிகளுள் ஒன்றாக விளங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது 68 ஆண்டுகளுக்கு பின்னர் தலைமை வழங்கும் அந்தஸ்தை இழந்து, புதிதாக உதயமான கட்சியுடன் கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது. நுவரெலியா, களுத்துறை உட்பட சில மாவட்டங்களில் தனது சொந்த சின்னத்திலும் (கை) அக்கட்சி போட்டியிடுகின்றது.

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் இரு அணிகளாக பிளவுபட்டே தேர்தலை எதிர்கொள்கின்றது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அணி யானை சின்னத்திலும், சஜித் பிரேமதாச தலைமையிலான தரப்பு தொலைபேசி சின்னத்திலும் களம் காண்கின்றன. ஐ.தே.க உறுப்பினர்களில் பெரும் பாலானவர்கள் சஜித் பக்கமே நிற்கின்றனர். அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பங்காளி களும் ரணிலைக் கைவிட்டு சஜித்துடன் சங்கமித்தே பொதுத் தேர்தலை எதிர்கொள்கின்றன.

அதேவேளை, உள்ளுராட்சி மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் முதல் தடவையாக போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டிலும் அமோக வெற்றியை பெற்றுள்ள நிலையில், பொதுத் தேர்தலிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இலக்கை குறிவைத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டணி அமைத்து தேசிய மக்கள் சக்தியாக தேர்தலை எதிர்கொள்கின்றது.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வடகிழக்கில் இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.

வாக்கு என்பது உங்கள் பலம், உரிமை. எனவே, அதனை முறை யாக அளிக்கவேண்டியதும் உங்கள் பொறுப்பாகும். கட்சி அல்லது சுயேட்சைக் குழுவுக்கு முன்னால் புள்ளடி இடாமல் விருப்பு வாக்கு பயன்படுத்தப்படுமானால் அந்த வாக்கு நிராகரிக்கப்பட்ட வாக்காகவே கருதப்படும். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்துவதும் பிழை யான நடைமுறையாகும். புள்ளடி இடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் இடவும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த வாக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.

வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வதற்கு முன்னர் வாக்காளருக்கான அட்டை, அடையாளத்தை உறுதிப்படுத்து வதற்காக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டுள்ள ஆவணங்கள் (தேசிய அடை யாள அட்டை, கடவுச்சீட்டு) இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இம்முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே தேர்தல் நடைபெறுகின்றது. எனவே, முகக்கவசமும், சமூக இடைவெளியும் கட்டாய மாக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறுதி நேரம் வரை காத்திருக்காது முடிந்தளவு விரைந்து சென்று வாக்குரிமையை பயன்படுத்தவும்.

(வழமையாக காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையே வாக்களிப்பு இடம்பெறும். இம்முறை மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.)

(தகவல்கள் :- தேர்தல் ஆணைக்குழு, சனத்)

 

 

SHARE