இலங்கையின் முதலாவது மின்சார மோட்டார் சைக்கிள்!

341
இலங்கை இளைஞர் ஒருவர் நாட்டில் முதலாவது மின்சார மோட்டார் சைக்கிளைத் தயாரித்துள்ளார்.

எரிபொருளின்றி இயங்கும் முச்சக்கரவண்டியை அசெம்பிள் செய்வதில் முன்னர் அறியப்பட்ட சசிரங்க டி சில்வா எனும் இளைஞனே இதைத் தயாரித்துள்ளார்.
மின்சார மோட்டார் சைக்கிளை முழுமையாக சார்ஜ் செய்தால், மொத்தமாக 120 கி.மீ. தூரத்தைக் கடக்க முடியும் என்றும், மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் என்றும் அவர் கூறினார்.

மோட்டார் சைக்கிளின் உடல், சேஸ் மற்றும் மின் கூறுகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

மோட்டார் சைக்கிள் ஓகஸ்ட் 2022 க்குள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன்  விலை இன்னும் வெளியிடப்படவில்லை.
குறித்த மோட்டார் சைக்கிள் சந்தைக்கு வருமிடத்து இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE