பொதுபலசேனாவிற்க்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பகைமை உணர்வை ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய அமைப்புகள் பயன் படுத்துவதற்க்கு அனுமதிக்ககூடாது இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடில்லியை சேர்ந்த செக்கியுரிட்டி ரிஸ்க் ஏசியா என்ற அமைப்பை சேர்ந்த பிரிகேடியர் பொன்ஸ்லே இதனை தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனாவிற்க்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பகைமை உணர்வை பயன்படுத்தி முஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாத மயப்படுத்தப்படுவதை தடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இதனை தடுக்காவிட்டால் அது ஐ.எஸ்.ஐ.எஸ் இலங்கைக்குள் ஊருடுவ வழிவகுக்கும்.
பொதுபல சேனாவிற்க்கும் -முஸ்லீம் சமூகத்திற்கும் இடையிலான இடைவெளி ஆபத்தானதாக மாறுகின்றது.
இந்த இடைவெளி அதிகரித்தால் இது முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதமயப் படுத்துவதற்கான கருவியாக அமையலாம். தற்போது அந்த நிலை இல்லாவிட்டாலும், இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
பாக்கிஸ்தானின் புலனாய்வு அமைப்பிற்க்கும் இது சாதகமாக அமையலாம், இதனையும் தவிர்க்கவேண்டும்.
இதுவரை இலங்கையிலிருந்து எவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இணையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.