இலங்கையில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் : சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும், இல்லையேல் ஆபத்து

534

இன்றைய நவீன உலகத்தில் உலகளாவிய ரீதியிலும், நாடளாவிய ரீதியிலும் பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமானதாக மாறிவிட்டது. குறிப்பாக கொரோனா வைரஸ் காலப்பகுதியில் பாலியல் வன்கொடுமைகளோடு சேர்ந்து குடும்ப வன்முறைகளோ தலைவிரித்து ஆடுகின்றது. இதனால் தற்கொலை மரணங்களும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. விடுதலைப்புலிகள் இருந்துவந்த காலப்பகுதிகளில் பாலியல் வன்கொடுமை என்பதற்கு வடகிழக்கு பகுதிகளில் இடமேஇல்லாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் பாலியல் வன்கொடுமையின் ஊடாக ஒரு இனப்படுகொலையின் ஊடாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை சர்வதேச நாடுகள் உதவியோர் வெற்றிகண்ட இலங்கை அரசு குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் மசாஜ் நிலையங்கள் விபச்சார நிலையங்கள் போன்றவற்றை மறைமுகமாக இயங்கி வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதோடு போதைப்பொருள் பாவனையும் அதிகரித்துள்ளது. போதையில் இளைஞர்கள் இவ்வாறான தீய செயல்களுக்குள் களமிறக்கப்படுகின்றார்கள். குறிப்பாக வடகிழக்கு பகுதிகளில் கல்வி தராதரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதிலும் மிகக்கொடுமையான விடயம் என்னவென்றால் சிறுவர் துஸ்பிரயோகம் என்பது இரண்டு வகையாக இடம்பெறுகின்றது. பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றார்கள். மற்றும் பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றார்கள். இதனால் ஒரு கல்விசமுதாயம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. சிறுவயது திருமணம், காதல் விவகாரம், பாடசாலை ஆசிரியர்களினால் துஸ்பிரயோகம், வேலை அலுவலகர்களினால் துஸ்பிரயோகம், குடும்ப வன்முறைகள் உருவாக்கப்பட்டு பாலியல் இலஞ்சம் கோரப்படுகிறது, முகநூல்கள் குறிப்பாக இன்போமேசன் டெக்னோலஜி போன்ற விடயங்களினாலும் சமுதாயத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழ் கலாசாரத்தின்படி ஒருவருக்கு ஒருத்தி என்ற திருமணமே இடம்பெறுகிறது அது சட்டம். சொந்த மனைவியை விட்டுவிட்டு விபச்சார விடுதிகளுக்கும் விலைமாதுகளுடன் தொடர்பை ஏற்படுத்தி குடும்ப வன்முறைகள் உருவாகுவதற்கு காரணமாக அமைகிறது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஊருக்கொரு மகளிர் அமைப்பு இருக்கிறது. சமூக ஏற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள் இவ்வாறான பாலியல் வன்முறைகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் பெண் சமுதாயத்திற்காக குரல்கொடுத்த ஒரு சிலரை தவிர இந்த அமைப்புக்கள் ஒன்றும் முன்வருவதில்லை. சமூகங்களுக்கிடையே பாலியல் ரீதியான சமூக விளக்கங்கள் கொடுப்பதில்லை. இதனால் பருவ மங்கைகள் அநாவசியமான செயற்பாடுகளில் களமிறங்கி தமது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறார்கள். இப்படிப்பட்டவர்களே கூடுதல் வன்முறைகளிலும் இறங்கி இவர்களுடைய வாழ்க்கை என்பது கடைத்தெருவிற்கு வருகிறது. அரசாங்கம் இதனை பாராமுகமாக செயற்பட்டு வருவதனால் நாடளாவிய ரீதியில் விபச்சாரிகளின் அதிகரிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வன்னி மாவட்டத்தில் 25 பாலியல் விடுதிகளும் யாழ் மாவட்டத்தில் 14 பாலியல் விடுதிகளும், கிழக்கில் 35 பாலியல் விடுதிகளும் இருப்பதாக தரவுகள் கூறப்பட்டாலும் அதனை இனங்கண்டு அப்புறப்படுத்தும் சூழ்நிலை உருவாக்கப்படவில்லை. இதற்கு பின்னால் அரசியல்வாதிகளினுடைய பங்களிப்பும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையை பொறுத்தவரையில் பாலியல்; வன்கொடுமை என்ற நாளாந்த வழக்குகள் நூற்றுக்கு மேற்பட்டவையாகவே அமைந்திருப்பதாக புள்ளிவரைபுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக இருந்தால் ஒரு நாட்டின் சமுதாயம் எவ்வாறு தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவது. சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும். குடும்ப வன்முறைகள் என்ற ஒன்று ஒரு புறத்திலிருந்தாலும் அதனை ஓரளவு கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் பாலியல் வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பதை கட்டுப்படுத்த தவறின் குறித்த இனத்தின் கலை, கலாச்சாரம் என்பது பாதிப்புக்குள்ளாக்கப்படும்.
ஆகவே பாடசாலை மட்டத்திலிருந்தே பாலியல் துஷ்பிரயோகங்களினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் வலியுறுத்தப்பட வேண்டும். சமூக ஆர்வலர்களினால் வலியுறுது;தப்பட வேண்டும். பொலிசார் சட்ட வீதி அமைச்சு போன்றவர்களினூடாகவும் இதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு பெண் சுதந்திரமாக இந்த நாட்டில் நடமாடித்திரிவதற்கு வழிவகைகள் வகுத்துக்கொடுக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் இராப்பொழுதிலும் ஒரு பெண் தனியாக நடமாடித்திரியக்கூடிய ஒரு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. அதனது மறுவடிவம் என்னவென்றால் கூடுதல் சுதந்திரம் அங்கு இடம்பெற்றது என்பதே. தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் கட்சிகள் இவ் விவகாரத்தை நன்கு அறிந்தும் வேலியே பயிரை மேய்கின்ற நிலைப்பாடே இன்று சம்பவித்துக்கொண்டிருக்கின்றது.
குறிப்பாக அநாதை இல்லங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தாய் தந்தையின்றி வளர்ந்து வருகின்றார்கள். இவர்கள் பெற்றோரினால் கைவிடப்பட்டவர்கள் என்று கூறுவதைவிட தவறான வழியில் பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகள் ஏராளமாக தற்பொழுது இருப்பதை அவதானிக்க முடிகிறது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒருபுறம், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மறுபுறம் தவறான வழியில் பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகள் ஒருபுறம் குப்பைத்தொட்டிக்குள் வீசுகின்ற குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்ற மற்றுமொரு பரிதாபநிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. நாள் ஒன்றிற்கு 600 பேர் வரையில் கருக்கலைப்பு நடவடிக்கைகளை தனியார் அரச மருத்துவமனைகளில் ஈடுபட்டு வருவதாக புள்ளிவரைபுகள் தெரிவிக்கின்றன. இத்தகையதொரு நிலைப்பாடு ஏன் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். யுத்தத்தை காரணம் காட்டிய இந்த இலங்கை அரசு தற்பொழுது கொரேனா வைரசை காரணம் காட்டுகின்றதா கருக்கலைப்புக்கு உச்சபட்ச தண்டனை இந்த நாட்டில் சட்ட உருவாக்கம் கொண்டுவரப்பட வேண்டும். இவ்வாறு இந்த நாட்டினுடைய வளர்ச்சியை குன்றச்செய்கின்ற ஒரு செயற்பாடாக இன்று பாலியல் வன்கொடுமை என்றதொன்று ஆக்கிரமித்து வருகின்றது. ஒரு இனத்தை அழிப்பதற்கு எப்படி எப்படியெல்லாம் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று இலங்கை அரசு நினைத்து செயற்படுகிறது. ஒரு நாட்டில் படையெடுக்கும் பொழுது யுத்தவெற்றியின் ஒரு கட்டமாக பாலியல் வன்கொடுமைகளை கையில் எடுப்பது வழக்கமாகும். ஆனால் யுத்தம் முடிந்த பின்னரும் அந்த நாட்டில் பாலியல் வன்முறைகள் உருவெடுப்பது என்பது அதற்கு ஏதுவான காரணிகளை உருவாக்குவது என்பது ஏட்புடையது அல்ல. சமூக ஆர்வலர்கள் தங்களை அரசியல் ரீதியாக வளர்த்துக்கொள்ள முட்படுகின்றார்களே தவிர மக்கள் நலன் மீது அக்கறையுடன் செயற்படவில்லை என்பதனையே இத்தகையதொரு செயற்பாடு சமூகத்தில் எடுத்துக்காட்டப்படுகிறது. தற்பொழுது இலங்கையில் அனைத்து பாகங்களிலும் விபச்சாரிகளின் நடமாட்டம் பொது இடங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. பஸ்தரிப்பு நிலையங்களிலும் மக்கள் நடமாடும் பகுதிகளிலும் இவர்களின் நடமாட்டத்தை அவதானிக்க முடிகிறது. சட்ட ரீதியில் இவர்கள் கைது செய்யப்பட்டாலும் ஓரிரு தினங்களில் வெளியில் வந்து விடுகிறார்கள். இந்த விபச்சாரிகளினால் இளம் சமுதாயமே முதலில் பாதிக்கப்படுகின்றது. இதனால் எயிட்ஸ் போன்ற அபாயகரமான தொற்று உருவெடுக்க வழியமைக்கிறது.
ஆகவே இந்த பாலியல் வன்கொடுமைகளில் இருந்து மக்களை தற்பாதுகாத்துக்கொள்ள தமிழ் அரசியல் தலைமைகளும் இந்த நாட்டின் ஜனாதிபதியும் சமுக ஆர்வலர்களும் முன்வர வேண்டும். இனம் மதம் மொழி கலை கலாச்சாரம் போன்றவை பாதுகாக்கப்படுமாக இருந்தால் மட்டுமே அந்த இனத்தின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும். திட்டமிட்ட அடிப்படையில் பெண் இனத்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படுகின்ற பாலியல் கலாச்சாரங்கள் விரட்டி அடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதனூடாகவே பெண் சமுதாயம் பாதுகாப்பானதொரு நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்பதே இக்கட்டுரையின் பிரதானமான நோக்கமாகும்.

SHARE