இலங்கையில் அனுர அரசு மீண்டும் யுத்தம் கட்டவீழ்த்துவிடுவதற்கான சதித்திட்டங்களை இந்திய அரசோடு சேர்ந்து ஆரம்பிக்கும் அபாயம்-இரணியன்

59

 

யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள இலங்கையரசு, மீண்டும் யுத்தம் கட்டவீழ்த்துவிடுவதற்கான சதித்திட்டங்கள் அரச தரப்பிலிருந்து கசியத்தொடங்கியுள்ளது. யுத்தத்தை எவ்வாறு முன்னெடுப்பது அல்லது எவ்வாறு இனவாதங்களைத் தூண்டிவிடுவது, அதிலிருந்து நாட்டை சமாதான சூழ்நிலையற்றதாகமாற்ற வெளிநாட்டு தீயசக்திகள் முன்னின்று செயற்பட்டுவருகின்றன.

அதற்கு இலங்கையரசு விலைபோயுள்ளதாக புலனாய்வுச்செய்திகள் தெரிவிக்கின்றன. மாவிலாறில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் நிறைவடைந்த யுத்தத்தின் வடுக்கள் இன்னமும் தமிழ்மக்கள் மத்தியில் ஆறாத நிலையில் இருந்துவருகின்றது.
தற்பொழுது சமாதான காலம், பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டிவிட்டோம் எனக் கூறும் இலங்கையரசு தமது பாதுகாப்பு நிலையங்களை குறிப்பாக வடகிழக்கில் பலப்படுத்திவருகின்றது. காரணம் அமெரிக்கரசால் மீண்டும் யுத்தமொன்றை இலங்கையில் ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.

அது மட்டுமல்லாது கிளர்ச்சிப்படைகள் என்ற போர்வையில் எவ்வாறு ஈராக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளில் இடம்பெற்றதோ அதேபோன்றதான தன்மையை உருவாக்கும் போர்வையில் நாடுகடந்த தமிழீழ அரசுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றது. இலங்கைப்புலனாய்வுத் தகவல்களின் படி தகவல்சேகரிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. 85 சதவீதமான தகவல்கள் பூகோள சம்பந்தப்பட்டவையாகவே அமைகின்றது.

உதாரணமாக இலங்கையில் ஒரு இராணுவ தரையிறக்கத்தினை ஏற்படுத்தவேண்டுமாயின் கொமான்டிங் செய்வதற்கேற்ற வகையில் இத்தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இலங்கையின் 65,610 சதுர கிலோமீற்றரும் அமெரிக்க ஊஐயுயினால் வரைபிடப்பட்டு, கடல், தரை மார்க்கங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது

. இவ்வாறான நிலையில் மற்றுமொரு யுத்தம் உருவாக்கப்படும் திட்டத்திலேயே அமெரிக்க நிறுவனங்களின் செயற்பாடுகள் இலங்கையில் அமையப்பெற்றுள்ளது எனலாம். வட, கிழக்கு, தென், மேல், மத்திய, ஊவா, சப்பிரகமுவ, வடமேற்கு, வடமத்திய போன்ற மாகாணங்களை உள்ளடக்கிய மக்கள் சனத்தொகை, அவர்களின் வாழ்வாதாரம் போன்ற விடயங்களும் இவர்களுடைய ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டை சதிப்புரட்சி செய்வதற்கும் அக்காலகட்டத்தில் இவ்வாறான தரவுகளே காரணமாக அமைந்திருக்கின்றன

. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை வேறுவிதமாக மாற்றியமைக்கும் செயற்திட்டமாக இச்செயற்பாடுகள் அமையப்பெறுகின்றது. யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்படவேண்டும் என ஐ.நா சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போர்க்குற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத அரசிற்கு எதிர்ப்புக்களை வழங்கும் முகமாக தமது திட்ட வியூகங்களை வகுத்துள்ளன. அதேநேரம் உலக வல்லரசின் உதவிகொண்டு வருகின்ற பிரச்சினைகளை முறியடிக்கலாம் என இலங்கையரசு எண்ணியுள்ளது. குறிப்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவேயென்பதாகும்.

வெளித்தோற்றத்தில் சீனா, ரஷ்யா அமெரிக்காவிற்கு எதிரானவர்கள் எனக்காட்டிக்கொள்கிறார்களே தவிர, அவர்களுடைய நட்பு அல்லது அவர்களுடைய தொடர்பாடல்கள் நேர்த்தியாகவே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகத் திகழும் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரித்தானியா இவற்றுள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அமெரிக்கா தனது நிலைகளை பலப்படுத்திக்கொள்ளும் வகையில் இலங்கையரசின் கடற்பிராந்தியங்களை கையாளும் இலக்கில் உள்ளது. அவை அவர்கள் கையில் கிட்டும் வரை இலங்கைக்கெதிரான போர் முன்னெடுப்புக்கள் இரகசிய தாக்குதல் திட்டங்களை முன்னெடுக்கும்.

காலத்திற்குக்காலம் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவை நம்பி தமிழினம் மண்னைக்கவ்வியது போன்று ஜனாதிபதி இந்தியாவின் அடிவருடிகளாகவும் நம்பவைத்து களுத்தறுக்கும் செயற்பாடகவும் கடந்த காலம் தொடக்கம் இன்றுவரை இந்தியஅரசு ஏமாற்று அரசியலை இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசானாயக்காவோடு அனுகுமுறைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் பயன்படுத்தி வந்த விமானப்பாதைகள், கடற்பிராந்தியக்கோட்டைகள், விமானங்கள், பதுங்குகுழிகள் போன்றவற்றை இராணுவம் கைப்பற்றியது. அண்மையில் அமெரிக்கரசினால் இலங்கையில் அமைவிடங்கள் முக்கியமாக 05 மலைத்தொடர்கள் தொடர்புடைய வரைபடங்கள் அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் வைத்து ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இவற்றிற்கான பின்னணிக்காரணங்கள் நிறையவே இருக்கின்றன. இவ்வாறான செயற்திட்டங்களை அமெரிக்கா மட்டுமல்ல இந்தியரசும் மேற்கொண்டுவருகின்றது. அதிகமான அதிகாரம் அமெரிக்காவின் கையிலிருப்பதாலும், சுயாதீனமாக செயற்படுவதற்கு அவர்களுக்கு முடிகின்றது.
இந்தியாவையும் இலங்கையையும் எடுத்துக்கொண்டால் இந்தியாவில் ஒரு மாநிலமே இலங்கையிலுள்ள சனத்தொகையாகக் காணப்படுகின்றது. 29 மாநிலங்களைக்கொண்ட இந்தியரசானது நூற்றி இருபத்தைந்து கோடி சனத்தொகையைக் தாண்டியுள்ள இந்நிலையிலும், 593 மாவட்டங்களை உள்ளடக்கியும், 7இலட்சம் கிராமங்களை உள்ளடக்கியும், 1652மொழிகளைக் கொண்டும், 4535 இனங்களைக் கொண்டும் காணப்படுகின்றது. தனி மாநிலங்களாக வடக்கு கிழக்கினைப் பிரித்து கூட்டமைப்பின் கையில் வழங்குவதற்கு இலங்கையரசு தயாராகவில்லை.

அவ்வாறு இதுவரை நடைபெறாது மீண்டும் அவரையே நியமிக்கும் நிலைமை தோன்றியுள்ளது. யுத்தத்தை முன்னெடுப்பதனூடாக இலங்கையில் என்றுமில்லாதவாறு நடைபெற்ற யுத்தமாகவே இனி ஒரு யுத்தம் அமையப்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதனை மாற்றியமைக்க அமெரிக்காவின் காலில் விழுவதை விட இலங்கையரசிற்கு வேறு வழியுமில்லை. இனி நடைபெறுகின்ற தாக்குதல்கள் ஒவ்வொன்றும் தொழில்நுட்ப ரீதியாகவே நடைபெறும்.

இரணியன் thinappuyal news

SHARE