இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புக்கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காணமுடியும் — நெற்றிப்பொறியன் –

629

தமிழ்மக்களுக்கான அர சியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமாகவிருந்தால், தமிழினத்தினை சுத்திகரிப்புச் செய்த அரசுடன் பேசுவது பயனற்றது. மீண்டும் ஒரு இனச்சுத்திகரிப்பினையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆகவே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும். இவ்விடயம் பற்றி முன்னாள் ஐ.நா. உதவிச் செயலர் ஹோம்ஸ் தெரிவிக்கையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புக்கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

3-15-2012-1-sri-lanka-war-crimes---prabaka

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சமூகமும், ஐ.நாவும் இன்னும் அதிகமாக பணியாற்ற வேண்டும் என்று எழும் கருத்துக்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இதைவிட அதிகமாக என்ன செய்ய முடியும் என்று கூறுவது தற்போதைக்கு கடினமாக இருக்கிறது. ஐ.நா பொதுச்செயலர் நியமித்த வல்லுநர்கள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. அது வெளிப்படையாக பொதுமக்கள் பாவனையில் இருக்கிறது.

இப்போது மேலதிகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு இலங்கை அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பது தான் இப்போதுள்ள பிரச்சினை. இந்த விசாரணைகள் மூலம் அனைத்துலக நாடுகள் தன்னைக் குறிவைப்பதாக இலங்கை அரசு நம்புகிறது. அவர்களை இதில் யாரும் குறிவைக்கவில்லை. ஆனால் அவர்களின் கடந்தகால நடவடிக்கைகள் தான் இந்த விசாரணைகள் கவனம் செலுத்தும் கருப்பொருள். எனவே அவர்கள் இந்த முயற்சிகளுக்கு, அதாவது ஒரு புதிய விசாரணைக்கு, முழுதாக ஒத்துழைக்கமாட்டார்கள்.

419367_3554568265901_1323522954_3496865_2102580968_n

எனவே நாம் இந்த அரசு மாறும் வரை பொறுத்திருக்க வேண்டும். அதன் பின்னர் வரும் புதிய அரசில் இருப்பவர்கள் இதற்கு ஒத்துழைத்தால் தான் நாம் உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம். ஆட்சியில் இருக்கும் அரசு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக, அனைத்துலக சமூகம் அமைதியாக இருந்து விடவில்லை. ஐ.நா வல்லுநர் குழு இது தொடர்பாக தனது அறிக்கையை சமர்பித்தது. பல தன்னார்வக் குழுக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஒரு அறிக்கை தந்திருக்கிறது. சனல் 4 தொலைகாட்சியின் விவரணப்படம் கூட இதன் ஒரு அங்கம் தான். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை இதை ஒருமுறை ஆராய்ந்திருக்கிறது. எனவே அனைத்துலக கவனம் இதில் இருக்கிறது. இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் இந்தப் பிரச்சினைகள் நடந்த இடத்தில் இருக்கும் அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. இது கவலையளிக்கும் ஒரு விடயம். ஆனால் அதுதான் தற்போதைய யதார்த்தம்.ஒரு இறையாண்மை பெற்ற அரசை அந்த அரசின் விருப்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா வற்புறுத்த முடியாது.

500x250xChannel4vn150312.jpg.pagespeed.ic.yPuXaHJn4W

இலங்கை விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு சபையில் கருத்தொற்றுமை இல்லை. ரஷ்யாவும், சீனாவும் இந்த விடயத்தில் பாதுகாப்புச்சபையை கூட்டுவதற்கு தயாராக இல்லை.
ஐ.நாவின் உறுப்பு நாடுகளிடையே கருத்தொற்றுமை இல்லாத நிலையில், ஐ.நாவால் நடவடிக்கை எடுக்க முடியாது.பொதுமக்களின் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில், இலங்கை அரசை, அந்த யுத்தப்பகுதியில் கனரக போர் ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஐ.நா வற்புறுத்திக் கொண்டிருந்தது.

இலங்கை அரசோ அந்தப் பகுதியில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றே கூறிக் கொண்டிருந்தது. ஆனால் அது உண்மையல்ல. அதேசமயம், விடுதலைப்புலிகளிடமும், சாதாரண பொதுமக்களை விடுவியுங்கள் என்று ஐ.நா கூறிக்கொண்டிருந்தது, ஏனென்றால் அதுவும் ஒரு அடிப்படையான பிரச்சினை. சாதாரண மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு எதிராக அங்கே பிடித்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

ஐ.நா தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டிருந்தது. ஆனால் ஐ.நாவிடம் ஒரு அதிசயத் தீர்வு இருந்தது என்ற கருத்து உண்மையான கருத்தல்ல. ஐ.நா தமிழ் மக்களுக்கு பெரிய அள வில் உதவியிருக்கிறது. ஐ.நா தான் இலங்கை அரசிடம் பேசி, போர் நடந்த பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களுக்கு நிவாரண முகாம்களை அமைக்குமாறு வலியுறுத்தியது.

அங்கே அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது போன்ற பிரச்சினைகள் இருக்கத் தான் செய்தன. அந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு சில மாதங்களில் தீர்வு காணப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளுக்கு இப்போது திரும்பி விட்டார்கள் என்று மேலும் தெரிவித்தார் ஜோன் ஹோம்ஸ்.

IMG_3603

இதேவேளை நாட்டிற்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை வெற்றிகொள்வதற்கு உள்நாட்டில் ஆட்சிமாற்றம் வேண்டும். நாட்டிற்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின் உள்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். இதற்கான விஸ்தரிக்கப்பட்ட செயற்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம் என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு மற்றும் பொருளா தார வீழ்ச்சி உட்பட இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு போதும் தீர்வை வழங்க முடியாது. எனவே அனைத்து தரப்புகளும் ஒன்றிணைவதே தற்போது சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் நாடு பெரும் ஆபத்துக்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக நாட்டிற்கு எதிரான சர்வதேச நாடுக ளின் முன்னெடுப்புகளானது மிகவும் ஆபத்தான சூழலையே ஏற்படுத்தியுள்ளது.ஆனால் அரசாங்கமோ தமது ஏமாற்று வேலைகளையும், போலி நடிப்புகளையும் உள்நாட்டில் மேடையேற்றி வருகின்றது. அரசாங்கத்திற்கு நாட்டின் மீதோ, மக்களின் மீதோ அக்கறையில்லாத நிலையே உள்ளது. எனவே நாட்டை பாதுகாக்க வேண்டியது தற்போதைய அத்தியாவசிய கடமையாகிவிட்டது. தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள் என பலரும் ஒன்றிணைந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த செயற்படவேண்டும். ஜே.வி.பி. தனது துணை அமைப்புகளுடன் இணைந்து அரசிற்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது.

பொது மக்களை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து மீட்க தற்போதைய அரசாங்கத்திடம் செயற்றிட்டங்கள் எதுவும் கிடையாது. மாறாக மேலும் பொதுமக்களை துன்புறுத்தியும், சர்வதேசத்திற்கு நாட்டை காட்டிக்கொடுத்துமே ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே இவ் அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபட ஒன்றிணைந்த போராட்டங்களே அவசியமாகும் என அவர் தெரிவித்தார்.
இலங்கையில் ஆட்சிமாற்றம் என்பதே சர்வதேசத்தின் விருப்பம். தமிழ் மக்­க­ளு­டைய இனப்­பி­ரச்­சினை இன்று அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா உள்­ளிட்ட சர்வ­தேச நாடு­களின் நலன்­க­ளுக்­கான பிரச்­சி­னை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. ஆனால் எம்மைப் பொறுத்­த­வ­ரையில், தமிழ் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­ கான தீர்­வாக, இம்­மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் பூர்த்தி செய்­யப்­பட்டு சுய­ நிர்­ண­யத்­துடன் நிம்­ம­தி­யாக அவர்கள் வாழ்­வதை உறு­தி ­செய்ய வேண்டும் என்­ப­ தே­யாகும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­ மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அக்­கட்­சியின் பேச்­சா­ள­ரு­மா­கிய சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்துள்ளார்.

தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னை­ யா­னது சர்­வ­தேச விவ­காரம் என்று வரும்­ போது அது உட­ன­டி­யாக தீர்க்­கப்­ப­டக்­ கூ­டிய பிரச்­சி­னை­யாக அமை­யாது. இன்று தமிழ் மக்­களின் பிரச்­சினை தமிழ் மக்­க­ ளுக்­கான பிரச்­சி­னை­யாக பார்க்­கப்­ப­டாது இந்­தியா, அமெ­ரிக்கா, சீனா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­களின் நலன்கள் சார்ந்­த­ தா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இப் பிரச்­சி­னையில் இலங்­கையின் நலன்­களும் அதி­க­ளவில் முக்­கி­யத்­து­வப்­ ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு எமது தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னை­யா­னது இன்று பல்­வேறு தரப்­பி­ன­ரு­டைய நலன்கள் சார்ந்­ த­தாக, பல்­வே­று­பட்ட பிரச்­சி­னை­களை உள்­ள­டக்­கி­ய­தாக மாற்­ற­ம­டைந்­துள்­ளது. ஆகவே இப்­பி­ரச்­சி­னைக்கு வௌ;­வேறு தரப்­புக்­க­ளினால் வௌ;­வெறு வகை­யான பொருள்­கோ­டல்கள் கூறப்­ப­டு­கின்­றன.
அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா போன்ற நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில், இப்­பி­ரச்­சி­னைக்கு வௌ;­வேறு வகை­யான விளக்­கங்­களும், வௌ;­வேறு வகை­யான பொருள்­கோ­டல்­களும் கொடுக்­கப்­பட்டு இப்­பி­ரச்­சினை வௌ;­வேறு வகை­யாகக் கையா­ளப்­ப­டுக்­கூடும். ஆனால் எம்மைப் பொறுத்­த­வ­ரையில், இந்த நாட்டில் வாழு­ கின்ற தமிழ் மக்கள் வட­கி­ழக்கு இணைந்த பிர­தே­சத்தில் சுய­நிர்­ணய உரி­மை­யுடன் நிம்­ம­தி­யாக வாழக்­கூ­டிய நிலையை உரு­ வாக்­க­வேண்டும் என்­ப­தா­க­வுள்­ளது. இதனை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் பல்­ வேறு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­ வ­துடன் இதனை எவ்­வாறு ஏற்­ப­டுத்­தலாம் என்­பது தொடர்­பா­கவும் சிந்­தித்து வரு­ கின்றோம்.

இதற்­காக எங்­க­ளு­டைய மக்­ களின் நலன்­க­ளுக்கு ஏற்­ற­வ­கையில் சர்­ வ­தேச சமூ­கத்தை எவ்­வாறு கையாள்­ வது என்­பது தொடர்­பா­கவும், அவ்­வாறு சர்­வ­தேச சமூ­கத்தின் உத­வி­களை பெற்­ றுக்­கொள்­கின்ற போது அவர்கள் தெரி­ விக்­கின்ற அல்­லது அவர்­களால் முன்­ வைக்­கப்­ப­டு­கின்ற சகல விட­யங்­க­ளையும் ஏற்­றுக்­கொள்­ளாமல் விடு­வது மற்றும் சர்­ வ­தேச சமூ­கத்தை எதிர்க்­காமல் எமது மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்­க­முற்­ப­ டு­வது போன்ற விட­யங்கள் தொடர்­பாக அவ­தானம் செலுத்தி வரு­கின்றோம்.

இதுவே இன்­றைய சூழலில் முக்­கி­ய­மான விட­ய­மாகக் காணப்­ப­டு­ கின்­றது. இதனை ஒரு­வ­ராலோ இரு­வ­ ராலோ சுய­மாகச் சிந்­தித்து செய்­து­ விட முடி­யாது. இதனை செய்து முடிப்­ ப­தற்கு கூட்­டுப்­பொ­றுப்பும், கூட்டுச் சிந்­த­ னையும் எமக்­கி­டையில் இருக்­க­வேண்டும். இதற்­ காக பல்­வேறுபட்ட நிபு­ணர்­க­ளி­ட ­மி­ருந்து செய்­தி­க­ளையும், விட­யங்­க­ ளையும், ஆலோ­ச­னை­க­ளையும் பெற்றுச் செயற்­ப­ட­வேண்டும். இவ்­வா­றான பிரச்­சி­ னை­க­ளுக்கு தனி­ந­பர்கள் அல்­லது ஒரு­ சிலர் எடுத்­தி­ருக்­கின்ற முடி­வுகள் சில சம­ யங்­களில் தோற்­றுப்­போ­யுள்­ளன. ஆனால் சில சம­யங்­களில் வெற்­றி­களும் கிடைத்­தி­ ருக்­கின்­றன.
இந்த வகையில் கூட்­டுப்­பொ­று ப்பு, கூட்டுக் கருத்துப் பரி­மாற்றம் என்­பதே முக்­கி­ய­மான விட­ய­மாக அமை­கின்­றது. இதனை அனை­வரும் புரிந்­து­கொள்­ள­ வேண்டும். இந்த முயற்­சியில் எமக்கு வெற்­றி­களும் தோல்­வி­களும் கிடைக்­ கலாம். ஆனால் வெற்றி கிடைக்­கின்ற போது ஒருவர் தலை­யிலும், தோல்­வி­ய­ டை­கின்ற போது தமிழ்த்தேசியக் கூட்­ட ­மைப்பின் மீதும் போடு­வது அழ­கான செய­ லாக அமை­யாது. தமிழ்த்தேசியக் கூட்­ட­ மைப்­பா­னது கூட்­டாக இயங்­கு­வ­தற்­கான சூழல்­க­ளையும், நிலை­மை­க­ளையும் உரு­ வாக்­க­வேண்டும் என்­பதே இங்கு முக்­கி­ய­ மான விட­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் ஆண்டு தேர்தல் ஆண்­டாக பெரும்­பா­ல­hன­வர்­களால் கணிக்­கப்­ப­டு­கின்­றது. இது பாரா­ளு­மன்றத் தேர்­த­லா­கவோ, ஜனா­தி­பதித் தேர்­த­ லா­கவோ இருக்­கலாம். இவ்­வி­ட­யங்கள் தொடர்­பாக, ஐக்­கிய தேசியக் கட்­சிக்­ குள்ளும் ஏனைய கட்­சி­க­ளுக்­குள்ளும் பேசப்­ப­டு­கின்­றது. தற்­பொ­ழுது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­குள்ளும் இவ்­ வி­டயம் தொடர்­பாக ஆங்­காங்கே பேசப்­ பட்டு வரு­கின்­றது. இவ்­வாறு பேசு­கின்­ ற­வர்கள் அமெ­ரிக்கா, இந்­தியா போன்ற சர்­வ­தேச நாடுகள் இங்கு ஆட்­சி­மாற்றம் ஒன்று ஏற்­ப­ட­வேண்டும் என்­ப­தையே விரும்­பு­கின்­றனர்.
இந்த வகையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­ப­டலாம் அல்­லது ஏற்­ப­டா­ மலும் போகலாம். ஆனால் தனி­நபர் ஒருவர் பொது ஜனா­தி­ப­தி­யாக வந்தால் அல்­லது சரி­யான ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்டால் நிச்­ச­ய­மாக ஆட்சி மாற்றம் ஏற்­படும். இங்கு ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படவேண்டும் என்பது சர்வதேச சமூகத்திற்கு தேவையாக இருக்கலாம். ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

எனவே இங்கிருக்கின்ற தமிழ் இளைஞர், யுவதிகள் அனைவரும் அரசி யல் மயப்படுத்தப்பட்டு எமது அரசியல் அபி லாஷையான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தினை தொடர்ந்தும் அரசி யல் ரீதியாக முன்னெடுக்க வேண்டும் அதற்கு கட்சிகளும் ஒன்றிணைந்து ஒத்துழைக்கவேண்டும். இதற்காக மலையகத்திலும், இந்தியாவிலும், சர்வதேச நாடுகளிலும் வாழ்கின்ற சகல தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து செயற்படுவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அதேசமயம் இலங்கையின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. மேற்குறிப்பிடப்பட்டவர்களின் கருத் துக்களை பார்க்கின்றபொழுது, ஆட்சிமாற்றத்தினைக் கொண்டுவருவது தமிழ்மக்களினுடைய விடயத்தில் சிறந்ததொன்றாகவே அமையும் எனலாம்.

– நெற்றிப்பொறியன் –

SHARE