இலங்கையில் இம்முறை நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 120 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.
60க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறியுள்ளார்.
இலங்கை இராணுவம் ஒழுங்கு செய்யும் இந்த பாதுகாப்பு மாநாடு 4 வது முறையாகவும் நாளை கொழும்பில் ஆரம்பமாக உள்ளது.
இந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியும் இதில் கலந்து கொள்ள உள்ளார்.