இலங்கையில், இரத்தினக்கற்கள் உள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் அதிகரித்து வரும் இரத்தினக்கல் அகழ்வின் காரணமாக சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.