இலங்கையில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் நோயாளர்களில் இருவர் இலங்கை பிரஜைகள் – சுகாதார அமைச்சு!

301

இலங்கையில் நேற்று கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் (Omicron) நோயாளர்களில் இருவர் இலங்கைப் பிரஜைகள் என சுகாதார அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று அடையாளம் காணப்பட்ட மூவரில் ஏனையவர் வெளிநாட்டவர் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய நோயாளிகளின் தொடர்பைக் கண்டறிவதற்கான விசாரணைகளை தொற்று நோயியல் பிரிவு முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வு கடந்த இரண்டாம் திகதி முதன்முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாட்டில் இதுவரையில் 4 ஒமிக்ரோன் நோயாளிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE