இலங்கையில் போர்க்குற்றங்கள்

499

சிறீலங்கா அரசாங்கத்துக்கு அச்சத்தையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்  நவநீதம்பிள்ளையின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை  நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் ஏழ்மை, இன ரீதியிலான பாகுபாடு, ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவை காரணமாக ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல் குறித்தும், சம்பந்தப்பட்ட நாடுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ; விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

முக்கியமாக இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான விவாதம் மார்ச் மாதம் 20-ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.சிறலங்கா அரசின் போர்குற்றங்கள் மற்றும் மாநிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்த நவநீதம்பிள்ளை இந்தக் கூட்டத்தொடரின் ஆரம்ப உரையிலும் சிறீலங்கா அரசின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்திருந்தார்

இந்தக் கூட்டத் தொடரில் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சிறீலங்கா இisத்த போர்க்குற்றங்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் நோ பயர் சூன் என்ற ஆவணப்படத்தை திரையிடவுள்ளது சிறீலங்கா அரசை கிலிகொள்ள வைத்துள்ளது.இந்த ஆவணப்படத்தில் தமிழீழ தேசித்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையபுதல்வர் பாலச்சந்திரனை சிறீலங்கா படையினர் பிடித்து வைத்து படுகொலை செய்ய நிழல்படம் உள்ளடக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை தோற்றுவித்திருக்கிறது.இந்த ஆவணப்படத்தை மனித உரிமைகள் பேரவையில் திரையிடக் கூடாது என்று சிறீலங்கா அரசு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.ஆனாலும் இந்தப்படம் திட்டமிட்டபடி திரையிடப்படும் என்று சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை சிறீலங்காவுக்கு எதிராக இந்தக் கூட்டத்தொடரில் அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வர உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது முந்தைய மனித உரிமை மாநாட்டில், இந்வாறான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்திருந்தது.அந்த தீர்மானத்தில்  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அத்துடன் இதை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக் குழுக்களை நியமிக்கவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா தலையிட்டு அதை தடுத்ததுடன் இந்தத் தீர்மானத்தை மென்போக்குடைய ஒரு தீர்மானமாக மாற்றி சிறீலங்கா அரசை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றியது

இந்த நிலையில் இப்போது இரண்டாவது தடவையாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை இந்தியா காப்பாற்றும் என்று சிறீலங்கா மலைபோல நம்பியுள்ளது.

ஆனால் இம்முறை சிறீலங்காவுக்கு  எதிரான தீர்மானத்தை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஆதரிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.ஆனால் இந்த தீர்மானத்தை ஆதரித்து சர்வதேச போர் குற்ற விசாரணை ஒன்று நடந்தால் இந்த போர் குற்றங்களின் பின்னணியல் இந்தியாவின் பங்கு இருந்தது அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதால் இந்தியா கடந்த முறை செய்ததைப்போலவே இம்முறையும் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலையையே செய்யும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.அதே நேரம் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் எவ்வாறான உள்ளடங்களை கொண்டிருக்கிறது. அது பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்குமா? அல்லது அமெரிக்காவின் பிராந்திய நலன்கான நிகழ்ச்சி நிரலுக்குள் ஈழத்தமிழர்களை பயன்பயன்படுத்தும் ஒரு முயற்சியாக அமையுமா என்பது தெரியவில்லை.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படியாக இருக்கும் என்பதை சர்வதேச நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலர் எஸ்தர் பிரிம்மர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மனித உரிமைகள்  பேரவையின் இந்த நடப்பு அமர்வில் துவக்க உரையாற்றிய அவர், சிரியா, இஸ்ரேல் மற்றும் வட கொரியாவில் நிலவும் மனித உரிமைகள் சூழல் குறித்துக் கவலை வெளியிட்டார். சிறீலங்கா  அரசு தான் அமைத்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளைக் கூட முழுமையாக அமல்படுத்தவில்லை என்று கூறிய அவர் இந்த ஆண்டு அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை முன்மொழியும் என்றார்.

‘கடந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது, இலங்கையில் இருக்கும் சிவில் உரிமைக் குழுக்கள் களத்தில் தமது பணிகளை முன்னேடுக்க உத்வேகமளித்ததாகவும் இந்த ஆண்டு தாங்கள் கொண்டுவரும் தீர்மானம்  இலங்கையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் கண்காணிக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும் நல்லிணக்கப்பாட்டை காண்பது மற்றும் பொறுப்புக் கூறல் விடயம் தொடர்பான உதவிகளை வழங்குவது தொடர்பாகவும்  இருக்கும் என்றும் இந்த தீர்மானம் சிறீலங்கா  அரசுடன் இணைந்த ஒரு கூட்டு முயற்சியாக இருக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது’என்றும் சர்வதேச நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலர் எஸ்தர் பிரிம்மர் குறிப்பிட்டார்.

அவரது இந்த உரை இரண்டு விடயங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஒன்று சிறீலங்கா அரசு அமெரிக்காவின் ஆலோசனையை ஏற்று அதனுடன் ஒத்துழைத்து செயற்பட ஒப்புக்கொண்டால் போர்குற்றம் மாநிடத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற வார்த்தைப்பிரயோகங்கள் எல்லாம் நல்லிணக்கம் என்ற ஒன்றை சொல்லுக்குள் அமுக்கப்பட்டுவிடும்.

மற்றது சிறீலங்கா அரசு இந்த விடயத்தில் முரண்டுபிடித்தால் போர்குற்றம் மாநிடத்துக்கு எதிரான குற்றங்கள் என்கின்ற குற்றச்சாட்டுக்கள்  முன்னரை விட அதிக வீச்சம் பெறுவதுடன் சிறீலங்கா மீது பொருளாதார தடை விதிக்குமளவுக்கு நிலைமை செல்லக் கூடும்.

இந்த இரண்டில் எந்த தேர்வை சிறீலங்கா மேற்கொள்ளப் போகிறது என்பதற்கான பதிலை கண்டுபிடிப்பதற்கு அவ்வளவு சிரமப்;படத்தேவையில்லை

அதாவது முதலில் வாய் வீரம் காட்டுவதும்  பின்னர் சரணாகதியடைவதும் தான் சிறீலங்காவின் அரசியல் வரலாறு. எனவே என்னதான் தனக்கெதிரான குற்றசாட்டுக்களை சிறீலங்கா முதலில் மறுத்தாலும் பின்னர் நல்லிணக்கம் அரசியல் தீர்வுக்கான கால அவகாசம் என்ற வார்த்தை ஜாலங்களை முன்வைத்து இந்தக் கண்டத்திலிருந்து தப்பத்துக்கொள்ளவே முயலும் என்பது பொதுவான கருத்தாகும். ஏற்கனவே இந்த ஆலோசனையை இந்தியா சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது

.வியட்நாம் யுத்தம் நடந்த போது அமெரிக்க விமானப்படையின் குண்டுவீச்சில்  எரிகாயங்களுக் குள்ளாகிய நிலையில் வீதியில் நிர்வாணமாக ஓடிய ஒரு சிறுமியின் புகைப்படம் வியட்நாமின் தலைவிதியை மாற்றியது. இப்போது அதையொத்த நிலையிலே பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.இதுவும் சர்வதேச அளவில் அதிர்வலைகளை தோற்றுத்திருந்தாலும் அது சிறீலங்காவின் தலைவிதியை மாற்றியமைக்குமா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.தமிழர்களாக நாம் உலகத்தமிழர்களாக ஒன்றுபட்டு அதற்காக இன்மும் அதிகமான உழைக்கவேண்டும் என்பதையும் அதற்காக நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்பதையும் சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

Advertisements
REPORT THIS AD

பின்னூட்டமொன்றை இடுகPosted by  மேல் பிப்ரவரி 28, 2013 in ‘இலங்கையில் போர்க்குற்றங்கள்Uncategorized

வீடியோ

சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் பிரத்யேக காட்சிகள்

Rate This

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் ஸோன் (போரற்ற பகுதி) என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.

டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடியூசன் க்பளப்பில் இன்று பிற்பகல் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பானது.

சர்வதேச மன்னிப்பு சபை என்று அழைக்கப்படும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதில், பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் இலங்கை ராணுவம் கொத்து, கொத்தாக குண்டுவீசிய கொடூரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், ஊரெங்கும் மக்கள் உயிரிழந்து சடலங்களாக கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

தாயும் குழந்தையும் ஒன்றாக வீழ்ந்து கிடப்பது, மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் உடல் சிதைந்த நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

பெண்கள் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் காட்சி இலங்கை ராணுவத்தின் உச்சகட்ட கொடூரத்தை வெளிப்படுத்துவாக இருக்கிறது. மேலும், விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பல பெண்களை ஒரு டிரக்கில் ஏற்றி ராணுவத்தினர் அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ், மன்றாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்தியிருப்பதும், இதனால் தமிழர்களின் உயிர் கொத்துக் கொத்தாக பறிக்கப்பட்டதாகவும் நோ பயர் ஸோன் ஆவணப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 20 நிமிடக் காட்சிகளை கொண்ட இந்த ஆவணப் படம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி புதியதலைமுறை தொலைக்காட்சி

No Fire Zone ஆவணப்படத்தின் இயக்குனர் C. Macrae உடனான நேர்காணல்..

தேசிய தலைவரின் இளைய மகனின் படுகொலை புகைப்படங்கள் பற்றியும், Channel 4 ஆல் வெளியிடப்படவிருக்கும் No Fire Zone பற்றியும், இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் திரு. C. Macrae உடனான நேர்காணல்..

நன்றி
புதிய தலைமுறை

வீடியோ

இலங்கை இறுதி கட்டப் போர்: உறைய வைக்கும் உண்மை..

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து எத்தனையோ நாட்கள், மாதங்கள் கடந்துவிட்டன. வருடங்கள் தொலைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் யுத்தத்தின் இறுதிக்கணங்களில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு மட்டும் இன்னுமும் நீதி கிடைக்கவில்லை.. அங்கு என்ன நடந்தது என்பதை சேனல் 4 தொலைக்காட்சி 2 ஆவணப்படங்களை ஏற்கனவே வெளியிட்டது.. அடுத்த மாதம் ஐநா மனித உரிமை கவுன்சில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் அங்கு வெளியிடுவதற்காக இன்னுமொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது சேனல் 4.

NO FIRE ZONE என்ற அந்த புதிய ஆவணப்படத்தில் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் உயிருடன் இருந்த கடைசி நேர புகைப்படங்கள் உட்பட புதிய காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
:-நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பாடல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பாடல்

முன்னாள் விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பிலான காணொளி ஆவணம்: அல்ஜசீரா தயாரிப்பு.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவிற்கு வந்த பின்னர் நாடு புதிய சுற்றுலாப் பயணிகளையும் வர்த்தகர்களையும் கவர்ந்திழுத்து வருகின்றது. ஆனால் இலங்கையின் சமூகங்கள் முன்பைவிடவும் மேலும் பிரிவினையாகியிருப்பது போலத் தோன்றுவதால் இன்னொரு பிரச்சினை தோன்றக் கூடிய அபாயம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குத் திரும்புகையில் தமது வாழ்க்கையில் இராணுவத்தின் நுழைவு இன்னமும் தொடர்ந்திருப்பதைக் காண்கின்றார்கள் என அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
இதேவேளை போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்குக்கு கிடையாது என கூறுபவர்களால் போரின் இறுதிக்கால கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க அதிகாரம் கிடையாதென விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.
இந்த அறிக்கை நேற்று ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ‘இலங்கை இணைகின்றது’ போன்ற குழுக்கள் நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலம் உள்ளதென்றே பார்க்கின்றனர்.
இந்த இளையோர் அமைப்பு இலங்கை முழுவதும் பயணித்து இனக்குழுக்களிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் தூண்டும் நகர்வுகளைச் செய்துவருகின்றன. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் அனேகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டள்ளனர் என அரசு தெரிவித்து வருகிறது. அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு சுமூகமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அல்ஜசீரா, முன்னாள் விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பிலான காணொளி ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. அக் காணொளி இங்க தரப்படுகிறது. இலங்கை போரிற்குப் பின்னதான கசப்பான இனப் பிரிவினையை மாற்ற என்ன தான் வழி ?

இலங்கையின் கொலைக்களம் பிரித்தானியாவின் சனல்4 தொகுத்த ஆவணப்படம்

குழந்தைகளும் மனவலிமை குன்றியவர்களும் இதை பார்க்கவேண்டாம்

இந்த படத்தை பார்க்க படத்தின் நடுவில் உள்ள பிரெஞ்சு எழுத்தை சொடுக்கவும்

ஐ.நா. வில் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்ற ஆவணக் காட்சி (காணொளி இணைப்பு)

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்!(கானொளி இணைப்பு)08

திருமுருகன் உரை

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்!(கானொளி இணைப்பு)07

-டி.எஸ்.எஸ் மணி உரை

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்!(கானொளி இணைப்பு).06

வழக்கறிஞர் பாண்டிமாதேவி உரை

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்!(கானொளி இணைப்பு)05

தோழர் ராஜேந்திர சோழன் உரை!

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்!(கானொளி இணைப்பு).04

பேராசிரியர் பால் நியூ மேன் உரை!

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்!(கானொளி இணைப்பு).03

அய்யநாதன் உரை!

SHARE