இந்த வகையில் கடந்த வாரம் மாத்தறை பொல்ஹேன பகுதியில் 22 வயதான பிரித்தானிய பெண், தாம் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கை சுற்றுலா சபையில் அறிக்கைப்படி இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 43 வீதமானோர் பெண்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமக்கு சுற்றுலா வழிகாட்டியாக வந்த ஒருவரே தம்மை துன்புறுத்தியதாக குறித்த பெண் முறையிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் 22 வயதான சுவீடிஸ் பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு பொலிஸ்காரர்கள், பதுளை எல்ல பகுதியில் வைத்து ஜேர்மனின் இரண்டு யுவதிகளை துன்புறுத்திய சம்பவம் பதிவு செய்யப்பட்டது.
அம்பாலங்கொட பகுதியில் வைத்து படிப்பின் நிமித்தம் வந்திருந்த அவுஸ்திரேலிய பெண், அவரின் வழிகாட்டியால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானார்.
இவ்வாறு தமது நாட்டு பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் காரணமாகவே பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தமது சுற்றுலா அறிவுறுத்தலில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.