இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை

256

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்து வருகிறது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வந்ததை தொடர்ந்து தங்கத்தின் விலை பாரியளவில் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி தங்கப் பவுண் ஒன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைவடைந்திருந்தது.
இவ்வாறான நிலையில், வீழ்ச்சியடைந்த வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைய, தங்கத்தின் விலை இன்றைய தினமும் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கொழும்பு செட்டியார்தெருவில் நேற்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியிருந்தது. அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 160,000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் செட்டியார்தெருவில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 178,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 164,700 ரூபாவாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்பிரகாரம், எதிர்வரும் ஓரிரு தினங்களில் பழைய விலைக்கு தங்கம் விற்பனை செய்யும் சாத்தியம் காணப்படுவதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
SHARE